திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்காவின் கணவர் மச்சினிச்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இர்பான், அதே பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற இளம் பெண்ணை இர்பான், காதலித்து வந்துள்ளார்.

இர்பான், காதலைச் சொன்னதும் சபிதாவும், விரும்பி காதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இருவரும் சில மாத காலம் காதலர்களாக வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து, காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணத்திற்குப் பின், இளம் பெண் சபிதா கணவரின் மதத்திற்கு மாறி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது, 17 வயதான சபிதாவின் தங்கை அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அக்காவைப் பார்க்க அடிக்கடி சபிதா வீட்டிற்குச் சென்று வந்து உள்ளார். 

அப்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி இர்பான் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அதன் பிறகு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை ராஜேந்திரன், இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அதிரடியாக இர்பானை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனால், அவரது மனைவி சபிதா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

காவல் நிலையத்தில் வைத்து, இர்பானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சபிதா இது தொடர்பாகத் தனது பெற்றோரிடம் சமாதானம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, அக்காவின் கணவர் 17 வயதான மச்சினிச்சியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல், திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள காமராஜ் நகர் சேரன் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 74 வயதான ஜெயராமன் என்ற முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்ற உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.