ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு, காதலன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான பிரசாந்த், கடந்த ஆண்டு அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், தற்போது அதே ஊரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அனிதா, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். அனிதா தினமும் பள்ளிக்குச் சென்று வரும் போது, எலக்ட்ரீசியன் பிரசாந்த், தினமும் அனிதா பின்னாடியே ஃபாலோ பண்ணிச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அனிதாவை ஒரு தலை பட்சமாகக் காதலித்து வந்த பிரசாந்த், அனிதாவுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தற்போது கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில், அனிதாவும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 

இதனால், அனிதாவைப் பார்க்க முடியாமல் தவித்த வந்த பிரசாந்த், ஒரு பக்கம் அனிதாவைப் பார்க்க முடியாத தவிப்பாலும், மற்றொரு பக்கம் அவர் இன்னும் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற ஏக்கத்தாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானர்.

மன உளைச்சின் உச்சத்திற்குச் சென்ற பிரசாந்த், அனிதா வீட்டை விட்டு வெளியே எப்போது வருவாள் என்று காத்திருந்தான். அப்போது, அனிதா கடைக்குச் செல்ல வெளியே வந்துள்ளார். 

அந்த நேரம் பார்த்து, “தன்னை காதலிக்க வேண்டும் என்று, அனிதாவிடம் பிரசாந்த் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளான். ஆனால், காதலை ஏற்க அனிதா மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பிரசாந்த், அங்குக் கிடந்த கத்திப் போன்ற இரும்பு கம்பியை எடுத்து, அனிதாவை கை, தலை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் அனிதா அலறித் துடிக்கவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் பிரசாந்த் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளான்.

இதனால், பதறிப்போன அப்பகுதி மக்கள் அனிதாவை மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்ல முயன்றனர். அத்துடன், இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்குள் தப்பி ஓடிய பிரசாந்த், அங்குள்ள  மின்கம்பத்தின் மீது ஏறி மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால், அந்த பகுதி மக்கள் மீண்டும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், பிரசாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு தலைக் காதலால் தாக்குதலுக்கு ஆளான சிறுமியை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குத்திவிட்டு, காதலன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.