மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை, அந்த பெண்ணே தைரியமாகச் செருப்படி வைத்தியம் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

வேலூர் அடுத்த கண்ணமங்கலம் கம்பம் பேட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதான பரசுராமன், வேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். 

Man beaten up for eve teasing and misbehaviour

தற்போது கொரோனா காலம் என்பதால், வேலூர் அரசு மருத்துவமனையில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில், கொரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக மட்டுமே மக்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்க்க வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த பரசுராமன், அந்த பெண்ணைப் பார்த்து கண் அடிப்பதும், கையால் சிக்னல் காட்டுவதும், ஜாடி காட்டுவதுமாக இருந்துள்ளார். பின்னர், அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அருகிலேயே வந்து அமர்ந்து, மெல்ல அந்த பெண்ணின் கையைப் பிடித்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை, காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதனையடுத்து, அந்த நபரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் மையத்தில், அந்த பெண் ஒப்படைத்தனர். பின்னர், அவர் பாகாயம் காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Man beaten up for eve teasing and misbehaviour

மேலும், சில்மிஷத்தில் ஈடுபடும் நபரைக் கண்டு பயம் இல்லாமல், செருப்பால் அடித்த அந்த சிங்கப் பெண்ணின் தைரியத்தை மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் பாராட்டினர்.

இந்த காட்சியை, அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, தற்போது வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.