மனைவியை கொல்ல நண்பனுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, கணவன் கொலை ஒப்பந்தம் செய்த சம்பவத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர். 

குஜராத் மாநிலம் விஜாபூர்மேக் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் நவி - குந்தா தம்பதியினர் வசித்து வந்தனர். தொடக்கத்தில் இந்த தம்பதியினர் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், போகப் போக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இப்படியாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், மனைவியை கொலை செய்து விடலாம் என்று, கணவன் சுரேஷ் நவி முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, தனது மனைவியை கொலை செய்வது தொடர்பாகத் தனது நெருங்கிய நண்பரான அந்த பகுதியைச் சேர்ந்த ஷம்பு ராவலை அணுகி ஆலோசனை கேட்டு உள்ளார். அத்துடன், தன் நண்பன் ஷம்பு ராவல்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “எப்படியாவது என் மனைவியை கொலை செய்து விடு” என்று, ஒரு புதிய திட்டத்தையும் கணவன் சுரேஷ் நவி தீட்டி கொடுத்து உள்ளார்.

மனைவியை கொல்ல நண்பருடன் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, கொலை ஒப்பந்தம் செய்.. 20 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, நண்பன் ஷம்பு ராவல் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளே எட்டிப் பார்த்து உள்ளார். 

அப்போது, நண்பன் சுரேஷ் நவியின் மனைவி குந்தாவை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, குந்தாவையை தூக்கத்திலேயே கழுத்தை நெரித்து ஷம்பு ராவல் கொடூரமாகக் கொலை செய்து உள்ளார்.

மனைவி குந்தாவை உயிரிழந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட அவர் கணவன் சுரேஷ் நவி மற்றும் அவரது நண்பன் ஷம்பு ராவல் ஆகிய இருவரும் உடனடியாக தலைமறைவானார்கள். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த குந்தவையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அறிக்கையின் படி, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், குந்தவை படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே அவரது கணவன் சுரேஷ் நவியை அதிரடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த சில வருடங்களில் சுரேஷ் நவி  நோய்வாய் பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ஆனால், இந்த வழக்கில் சுரேஷ் நவியின் நண்பனும், குலை செய்த குற்றவாளியுமான ஷம்பு ராவல் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 20 வருடங்களாகத் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை குற்றவாளியை ஷம்பு ராவல் பதுங்கி இருக்கும் இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வேறு ஏதேனும் கொலை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.