மனைவியின் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சாமியார் முன் மனைவியை உட்கார வைத்துவிட்டு, கணவன் வெளியே சென்று காத்திருந்திருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த சாமியார் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பலரும் “போலி சாமியார்” என்று, மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு கணவன் - மனைவி மட்டும், தங்களது வறுமையின் காரணமாக, இந்த போலி சாமியாரை நாடிச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது, கணவன் - மனைவி இருவரையும் பார்த்த அந்த சாமியார், அந்த பெண்ணின் மீது சபலப்பட்டு, அவரை எப்படியும் அடைந்துவிட வேண்டும் என்று, ஆசைப்பட்டிருக்கிறார்.

அதன் படி, அந்த போலி சாமியார் தனது இரு சிஷ்யர்கள் மூலமாகத் தனது திட்டத்தை நிறைவேற்றக் காய் நகர்தியிருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன், அந்த சாமியார் சொல் படி கேட்டு நடந்திருக்கிறார்.

அந்த தருணத்தில், அந்த சாமியாரின் 2 சிஷ்யர்களும் அந்த பெண்ணின் கணவனிடம் சென்று, “உன் மனைவியை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வந்தால், உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்றும், உங்கள் வறுமை நீங்கும்” என்றும், அவரை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்.

இதில் மயங்கிய அந்த பெண்ணின் கணவன், அவர்கள் சொன்னபடி கேட்டு நடந்து வந்திருக்கிறார்.

அப்போது, “சிறப்பு பூஜைக்காக, உன் மனைவி ஒட்டு துணி இல்லாமல் சாமியார் முன்பு வந்த அமர வேண்டும் என்றும், அப்போது இந்த பூஜைகளை செய்து வந்தால், நீ நினைத்து எல்லாம் உன் வாழ்க்கையில் நடக்கும்” என்றும், அவர்கள் ஆசைகாட்ட, அதற்கு அந்த பெண்ணின் கணவன் சம்மதித்து இருக்கிறார்.

ஆனால், அதே நேரத்தில் அவருடைய மனைவி இதற்குச் சம்மதிக்கவில்லை. கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதனால், தனது மனைவியை அவர் அடித்து உதைத்து கடும் சித்ரவதைகளைச் செய்திருக்கிறார்.

மேலும், தனது மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் எல்லாவற்றையும் கழற்றி, தனது மனைவியைப் பிறந்த மேனியாக அந்த போலி சாமியார் முன்பு உட்கார வைத்துவிட்டு, இவர் வெளியே வந்து காவலுக்கு நின்றிருக்கிறார்.

அந்த பெண்ணின் கணவனே வெளியே காவலுக்கு நிற்பதால், அந்த சாமியாரும் “பூஜை செய்கிறேன்” என்கிற பெயரில், அந்த பெண்ணை பார்த்துப் பார்த்து ரசித்துவிட்டு, வலுக்கட்டாயமாக ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இப்படியாக, கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை அந்த போலி சாமியார் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

அத்துடன், தன்னுடைய கணவனுக்காக இந்த சித்திரவதைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு வந்த அவரது மனைவி, ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, “இனி, எனக்கு கணவனே வேண்டாம்” என்கிற முடிவுக்கு வந்து, அங்குள்ள கந்துபூர் காவல் நிலையத்தில் தனக்குத் தனது கணவன் மற்றும் போலி சாமியாரால் நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள் குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “இந்த வழக்கில், சாமியாரைத் தவிர வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும், இந்த பெண்ணை தவிர வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா?” என்றும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த போலி சாமியாரையும், அந்த பெண்ணின் கணவனையும் கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.