மதுரையில் 14 வயது சிறுமியிடம் ஃபேஸ்புக் மூலம் காதல் வலை விரித்த இளைஞர் ஒருவர், சிறுமியை ஏமாற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். 

இதனிடையே, சிறுமிக்கு ஃபேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கதியைச் சேர்ந்த முகமது சபின் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், கடந்த ஒரு வருட காலமாக சிறுமியும், முகமது சபினும் ஃபேஸ்புக் மூலமாகவே பழகி வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம், தினமும் அந்த சிறுமியை புகழ்ந்து தள்ளிய முகமது சபின், அந்த பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், அந்த சிறுமி ஃபேஸ்புக்கில் முழு நேரமும் மூழ்கிக் கிடந்துள்ளார். இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞன், சிறுமியிடம் “உன்னை நேரில் பார்க்க வேண்டும். ஆசையாக இருக்கிறது” என்று பல ஆசைவார்த்தைகள் கூறி உள்ளான். அதற்கு, அந்த சிறுமியும் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் எப்படியோ மதுரை வந்த முகமது சபின், சிறுமிக்கு போன் செய்து, “உன் வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். வா, வண்டியில் ஒரு ரவுண்ட் போய்விட்டு வருவோம்” என்று, ஆசை வார்த்தைகளை விரித்துள்ளார். அந்த சிறுமியும், ஒரு ரவுண்டு தானே என்று வண்டியில் ஏறி உள்ளார்.

சிறுமி வண்டியில் ஏறியது தான், தாமதம். உடனே, மதுரையைச் சுற்றிக் காட்டுவது போல் பாவனை செய்து, திண்டுக்கல், நத்தம், பழனி, பொள்ளாச்சி என மாவட்டம் விட்டு மாவட்டம் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இரவு வருவதற்குள் திரும்பவும் வீட்டில் விட்டுவிடுவதாகவும், சிறுமியிடம் பேசி வசியப்படுத்தி உள்ளார்.

முகமது சபினை நம்பி அந்த சிறுமி பல ஊர்களுக்கும் பயணித்துள்ளார். அப்போது, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி, அதிகப் பணம் கொடுத்து ஒரு அறை எடுத்துத் தங்கி உள்ளார்.

அந்த விடுதியின் அறைக்குச் சென்றதும், சிறுமியை பல முறை முகமது சபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் திண்டுக்கல், நத்தம், பழனி, பொள்ளாச்சி என மாவட்டம் விட்டு மாவட்டம் ஒவ்வொரு ஊராகச் செல்லும் போதும், அந்த சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதே நேரத்தில், வீட்டில் சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், மாலை வரை எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியின் செல்போன் எண் பொள்ளாச்சியை காட்டி உள்ளது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் போன் சுவிட்ச் ஆப் ஆனது.

இதனையடுத்து, சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து, முகமது சபின் நம்பரை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி, முகமது சபின் செல்போன் நம்பரை வைத்து, அவரை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி பொள்ளாச்சியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் மனோகரி தலையிலான குழுவினர், அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். அத்துடன், சிறுமியை கடத்திச் சென்ற முகமது சபினை அதிரடியாகக் கைது செய்து அழைத்து வந்தனர். 

சிறுமி மாயமான அடுத்த 2 நாட்களில் போலீசார் சிறுமியை அதிரடியாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, முகமது சபினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், இ பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் என்றது எப்படி? என்றும், விதிமுறைகளை மீறி விடுதியில் அறை எடுத்துத் தங்கியது எப்படி என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, முகமது சபின் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட சிறுமியை தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏற்படுத்தி உள்ளது.