மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தையால் சிறுமி 5 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், தாய்க்கும் - மகளுக்கும் எய்ட்ஸ் நோய் பரவி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியின் அருகில் இருக்கும் வன்னிவேலம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி, கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

அப்போது, தான் தங்கியிருந்த வீட்டின் அருகே கணவனை இழந்த ராணி என்ற பெண், தனது இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அந்த ராணிக்கும் ராமமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணுடன், கடந்த 9 ஆண்டுக்காலமாகச் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

இதனை, ராணியின் சக உறவினர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனையடுத்து, ராமமூர்த்தி ராணியையும், அவரது இரு பெண் குழந்தைகளையும், மதுரை டி.கல்லுப்பட்டி பகுதியின் அருகில் இருக்கும் வன்னிவேலம்பட்டிக்கு அழைத்து வந்து, தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். அப்போது, ராணியுடன் குடும்பம் நடத்தி வந்த ராமமூர்த்தி, ராணியின் இரு பெண் குழந்தைகளுக்கும் வளர்ப்புத் தந்தையாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணியின் 13 வயது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், கதறி அழுது தனது மகளிடம் “இதற்கு யார் காரணம்?” என்று கேட்டுள்ளார்.

அப்போது, அந்த சிறுமியும் அழுதுகொண்டே தனக்கு வளர்ப்புத் தந்தை ராமமூர்த்தயால் நேர்ந்த தொடர்ச்சியான மற்றும் மிரட்டலான பாலியல் பலாத்காரம் குறித்துக் கூறி, கதறி அழுள்ளார்.

மேலும், சிறுமியின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த போது, கருப்பம் அடைந்துள்ள அந்த 13 வயது சிறுமிக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ராமமூர்த்தியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி மற்றும் சிறுமியின் தாயார் ராணியின் ரத்த மாதிரிகளையும் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.