மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பத்மப்ரியா என்பவர் , மதுரைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்னை பெற்று, கல்லூரியிலும் முதல் மாணவியாகத் திகழ்ந்து தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். 


கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு சென்ற பத்மப்ரியா, வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடத்தில் இருக்கும் சந்தேகங்களை விளக்கி இருக்கிறார். அப்போது அங்கு வந்த துறைத் தலைவர்  முத்துக்குமார் கோபமடைந்து பத்மப்ரியாவை திட்டியுள்ளார். நீ என்ன ஆசிரியரா? வகுப்பு எடுக்கும் அளவிற்கு பெரிய ஆள் ஆகி விட்டாயா என்று சக மாணவர்களுக்கு முன்பு அவதூறு வார்த்தைகளை பேசியுள்ளார். 


இதனால் அவமானம் தாங்க முடியாமல் , மாலை வீட்டிற்கு வந்தவுடன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தற்கொலை செய்துள்ளார். விஷம் அருந்தி மயங்கி இருந்த நிலையில் இருந்த பத்மப்ரியாவை கண்ட அவரது பெற்றோர் , மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் பத்மப்ரியா உயிரிழந்துள்ளார்.


இதுதொடர்பாக கல்லூரியில் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை மற்றும் பத்மப்ரியாவின் இறப்பிற்கு உரிய பதிலும் அளிக்கப்பட்டவில்லை. இதனால்  பேராசிரியரைக் கைது செய்து பணி நீக்கம் செய்தால் மட்டுமே மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர். நன்றாக படிக்கிற மாணவி, பேராசிரியர் சக மாணவர்கள் முன்பு திட்டி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துக்கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் தேவதனை தெரிவித்து வருகிறார்கள்.