மதுரை அருகே 70 வயது மூதாட்டியின் அழகில் மயங்கிய 37 வயது இளைஞன் ஒருவன், அந்த மூதாட்டியை திட்டம் போட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்திச்சு, நாட முழுவதும் ஒரே பாலியல் பலாத்கார சம்பங்களாக அதிகரித்துப் போய் உள்ளது, சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்து உள்ள திருகானை கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக, வசித்து வந்தார். பகல் நேரங்களில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு, சுற்றி உள்ள அக்கம் பக்கத்தினர் வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக, மூதாட்டி இரவில் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை, அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கார்த்தி பாண்டி என்ற இளைஞர் கவனித்து வந்துள்ளார். அத்துடன், அந்த மூதாட்டியின் அழகில் மயங்கிய அந்த இளைஞன், அந்த மூதாட்டியை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று பல நாட்களாகத் திட்டும் போட்டு வந்ததும் தெரிய வந்தது.

அதன் படி, நேற்று மாலை முதலே மூதாட்டியையும், அவரது வீட்டையும் கார்த்தி பாண்டி நோட்டம் இட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு நேரத்தில் அந்த மூதாட்டி தனியாக இருந்ததை உறுதி செய்து கொண்டார்.

இதனையடுத்து, இரவு நள்ளிரவு நேரத்தில், அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்த கார்த்தி பாண்டி, மூதாட்டியிடம் தவறான வார்த்தைகளால் பேசி அவரது மனதில் ஆபாசத்தைத் தூண்டிவிடப் பார்த்திருக்கிறார். ஆனால், அதற்குப் பதிலாக மூதாட்டி  கடும் கோபமடைந்து உள்ளார். 

அத்துடன், அந்த கோபத்திலும், “வீட்டை விட்டு வெளியோ போ” என்று, கார்த்தி பாண்டியை மூதாட்டி கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

இதனையடுத்து, மூதாட்டி மீது இருந்த ஆசையில் கார்த்திக் பாண்டிக்கு காமம் தலைக்கே ஏறி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். ஆனால், அந்த மூதாட்டி இளம் வயது பெண்மணி போல் விடாமல், அவரிடமிருந்து விடுபடத் தொடர்ந்து போராடி உள்ளார். இதன் காரணமாக, அந்த மூதாட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போன அந்த இளைஞன், வேறு வழி இன்றி அந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, இன்று காலையில் விடிந்த உடன் நள்ளிரவு நேரத்தில் நடந்தவற்றை அக்கம் பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டி உடன் ஒத்தக்கடை காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, நள்ளிரவு நேரத்தில் மூதாட்டிக்கு பாலியல் பலாத்காரம் தொல்லை கொடுத்தது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்து செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், தான் செய்த குற்றத்தை கார்த்திக் பாண்டி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, கார்த்திக் பாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.