மதுரையில் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்த இளைஞரைப் பார்த்த கிராம மக்கள், ஒன்று திரண்டு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகல் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆணைக் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த 24 வயதான தனபாண்டி என்ற இளைஞர், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூருக்கு சென்று உள்ளார். அங்கு, ஒரு தனியார் நூற்பாலையில் பணிக்கு சேர்ந்து உள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமியுடன் தனபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, 24 வயதான தனபாண்டி அந்த 16 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்து உள்ளார். அந்த நெருக்கமான பழக்கத்தில், அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, அந்த சிறுமியை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து உள்ளார். தனபாண்டியின் வசிகரமான பேச்சில், அவனின் காதல் வலையில், அந்த சிறுமி விழுந்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை, திருப்பூரிலிருந்து மதுரைக்கு அழைத்துச் சென்று உள்ளார். மதுரைக்குச் சென்றதும், அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து தனபாண்டி, அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. கோயிலில் வைத்து சிறுமிக்கு அந்த இளைஞர் தாலி கட்டியதை, அங்கு இருந்தவர்கள் சிலர் பார்த்து உள்ளனர். இதனையடுத்து, அந்த கிராமத்தில் உள்ள பெரிய மனிதர்கள் சிலருக்கு தகவல் தெரிவிக்கவே, அந்த கிராம மக்கள் திரண்டு வந்து  சிறுமியை திருமணம் செய்த அந்த இளைஞனிடம் அந்த கிராமத்து மக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல், அந்த கிராமத்தில் காட்டு தீ போல் முழுவதும் பரவியது.

மேலும், இது குறித்து, அந்த பகுதியில் உள்ள சோழவந்தான் காவல் நிலையத்திற்கு அந்த கிராம மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். அத்துடன், அந்த பகுதியில் உள்ள சைல்டு லைன் அலுவலர்களுக்கு சட்டத்தை மீறிய திருமணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல் துறையினர், சிறுமியை திருமணம் செய்த தனபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து. அந்த சிறுமியை மீட்ட போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், அங்கு விரைந்து வந்த நிலையில், அவர்களிடம் சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

அதே போல், நாகப்பட்டினத்தில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான கட்டட தொழிலாளி தமிழ்ச் செல்வன், அந்த பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால், அந்த சிறுமி, கர்ப்பமடைந்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுமியின் உடல் தோற்றத்தில் பல மாற்றம் கண்டு உள்ளது. இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக சிறுமியிடம் தனியாக அழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது, தமிழ்ச்செல்வன் தன்னிடம் பல முறை தவறாக நடந்து கொண்டதாகச் சிறுமி கூறி அழுது உள்ளார்.

அதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.