எதிர்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கம் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. 

இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில் காலை 11 மணிக்கு தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி குடைபிடித்தபடி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘“மழைக்கால கூட்டத் தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவிசயம்” என்று, குறிப்பிட்டார். 

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடினமான கேள்விகளை கேட்கட்டும் என்றும், ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

“அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்” என்றும், பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், மழைக்கால கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் பலரும், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில்” மிதிவண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். அத்தடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் முன்பு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல் தொடங்கிய நிலையில், மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் பதவிபேற்றுக்கொண்டார். அவர்களுக்கு, சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

அதன் படி, தமிழில் பதவியேற்றுகொண்ட விஜய்வசந்த், “பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க” என்று, பதவியேற்றபின் குறிப்பிட்டு பேசினார்.

இதனையடுத்து, அவை தொடங்கியதுமே, புதிய அமைச்சர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் மிக கடுமையாக முழுக்கமிட்டனர். இதனால், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே போல், எதிர்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. 

எதிர்கட்சிகளின் அமளியால்யால், நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, டெல்லி சென்றுள்ள தலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, “நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எடுத்துரைத்தார்.