“நவம்பர் 1 ஆம் தேதி அன்று மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை” என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 2 வது அலையாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையானது சற்று குறைந்து வந்த காரணத்தால், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 

அதுவும், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியே முறையாக நெறிமுறைகளை வகுக்கப்பட்டு, அவைகள் அப்படியே கடைபிடித்து பள்ளிகள் யாவும் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அத்துடன், தமிழக அரசு கடந்த கடந்த 14 ஆம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அதில், “நவம்பர் 1 ஆம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம்” என்றும், அறிவித்தது.

அதாவது, “நவம்பர் 1 ஆம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகளான LKG, UKG மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என்றும், இதன் காரணமாக காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்றும், தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் அறிப்பை அடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். 

இந்த நிலையில், “தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள்  திறக்கப்படாது என்றும்,  தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை” என்றும், தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.

அத்துடன், “மழலையர் எல்.கே.ஜி யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றும், தமிழக அரசு அரசானை வெளியிட் உள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும், இது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியடப்படும்” என்றும், தெரிவித்து  உள்ளார்.