ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த நிலையில், பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. பதைக்க செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் குருவிக்குளம் அருகே தான் இப்படி அரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்கிவிட்டு, தனியார் பேருந்தில் ஒன்றில் ஏறி வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது, அந்த தனியார் பேருந்து நிறுத்தம் அருகே வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த மகேஸ்வரி, இறங்குவதற்காக எழுந்து உள்ளார். 

அப்போது, அந்த பேருந்து அங்குள்ள சாலையின் சிறிய வளைவில் லேசாக வளைந்து அதே வேகத்தில் சென்றுள்ளது. இதனால், படிக்கட்டின் எதிரே இருந்த இருக்கையில் இருந்து எழுந்த மகேஸ்வரி, அப்படியே நிலைத்தடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு பேருந்தை விட்டு சாலையில் கீழே விழுந்தார்.

உடனே, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பதறித் துடித்த நிலையில், உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.

அத்துடன், பேருந்தில் இருந்து சர சரவென்று இறங்கிய சக பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் ஓடிச் சென்று பலத்த காயமடைந்த அந்த பெண், மீட்டு அருகில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அந்த பெண்ணுக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில், பேருந்தில் இருந்து மகேஸ்வரி தவறி சாலையில் கீழே விழுந்த காட்சிகளானது, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை பதபைதைக்க செய்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குருவிகுளம் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.