ஒரு சிறுமியை கடந்த 10 மாதத்தில் 3 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த கொடுமையால், சிறுமி 8 மாத கர்ப்பம் அடைந்துள்ள நிலையில், 55 வயது காமுகன் உட்பட பாலியல் பலாத்காரம் செய்த மாப்பிள்ளை மணிமேடையிலேயே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா என்னும் பெருந் தொற்று பரவி வருகிறது. அனைவரும் விலகி இருங்கள் என்று அரசு சொன்னால், அதை யாருமே காதில் வாங்கிக்கொள்ளாமல், தங்கள் இஷ்டத்துக்கு மனம் போன போக்கில், ஆசைக்கு மயங்கிக் கிடக்கிறார்கள் என்பது, இதுபோன்ற பாலியல் பலாத்கார வழக்குகள் மூலம் உண்மைத் தன்மை தெரிய வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்துள்ள குண்டலப்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது தாய் மாமன் வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.

அப்போது, தாய் மாமன் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக வீட்டிலிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க முன்னாள் ஊழியரான 55 வயதான உதயணன் என்பவர், மதுபோதையில் அந்த வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சக்தி மற்றும் ராம்ராஜ் ஆகிய இளைஞர்களும், அந்த சிமியை மிரட்டித் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அத்துடன், “இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்து விடுவோம்” என்றும், அவர்கள் சிறுமியை மிரட்டி உள்ளனர்.

இதனால், உயிருக்குப் பயந்த அந்த சிறுமி, இது குறித்து தன் தாய் மாமன் உட்பட யாரிடமும் எதுவும் சொல்லாமல் பயந்துபோய் இருந்து உள்ளார்.

இதனையடுத்து, தற்போது அந்த 17 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில், தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார். தாய் மாமன் வீட்டிற்குச் சென்று வந்துள்ள நிலையில், அந்த சிறுமியின் வயிறு பெரிதாகி உள்ளது. அந்த சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சந்தேகத்தின் பேரில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்க சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், “என்ன நடந்தது என்று?” சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, கடந்த 10 மாதத்தில் 3 பேரால் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து, அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இது குறித்து சிறுமியின் தாய்மாமனிடமும் புகார் கூறினார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அத்துடன், சிறுமியின் தாய்மாமன், அந்த 55 வயது காமுகனைப் பிடித்து, அடித்து விசாரித்தபோது, அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஊர்மக்கள் சேர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையின் போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சக்திக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அப்போது, சக்தி மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்காக மணமேடையில் காத்து நின்றார்.

அந்த நேரத்தில் திருமண மண்டபத்தின் மணமேடைக்குச் சென்ற போலீசார், மணமேடையில் வைத்தே சக்தியை அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், சக்தி நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் நின்றுபோனது. 

அதேபோல், சிறுமியை பலாத்காரம் செய்யாத மற்றொருவனான ராமராஜ் என்ற இளைஞனையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், சிறுமியின் கருவை இனியும் கலைப்பது என்பது, அது சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்று, போலீசார் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.