9 ஆம் வகுப்பு மாணவியை 4 பேர், 3 நாள் வச்சி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் புதுக்குறிச்சி கடினாம்குளம் பகுதியில் உள்ள பள்ளியின் விடுதியில் தங்கி, மாணவி ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

schoolgirl sexual assault

இந்நிலையில், மாணவியைக் காணவில்லை என்று விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கடினாம் குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியின் ஆண் நண்பர் 20 வயதான நிரஞ்சனை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “கடைத் தெருவிற்குச் சென்றுவிட்டு, விடுதிக்குச் செல்வதற்காகத் தனது ஆண் நண்பரான நிரஞ்சன் டூவீலரில் மாணவி ஏறியுள்ளார். 

டூவீலர் சிறிது தூரம் சென்றதும், அதில் நிரஞ்சனின் மற்றொரு நண்பனும் ஏறியுள்ளார். இதற்கு அந்த பள்ளி மாணவி எதிர்ப்புத் தெரிவிக்கவே, ஏதோ சமாளித்தபடியே டூவீலரை ஓட்டிச் சென்ற அவர், விடுதிக்குச் செல்லாமல், வர்கலா என்னும் பகுதியில் உள்ள ஒரு ஆளில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  

அந்த வீட்டில் ஏற்கனவே நிரஞ்சனின் மற்ற 2 நண்பர்கள் இருந்துள்ளனர். அந்த வீட்டில், அந்த பள்ளி மாணவியை 3 நாட்கள் அடைத்து வைத்து, 4 பேரும் சேர்ந்து பலமுறை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனையடுத்து, 3 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில், கழக்கூட்டம் என்னும் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்” என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீசார், உடனடியாக மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த சோஜன், அபிலாஷ், டோமி ஆகிய 3 பேரையும், போலீசார் இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

schoolgirl sexual assault

இதனிடையே, பள்ளி மாணவியை 4 பேர் கடத்திச் சென்று, 3 நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.