ஒருதலைக் காதலால் மாணவியைத் தீவைத்துக் கொளுத்திய ஒருதலைக் காதலன், தன் மீதும் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, இன்று அதிகாலை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மாணவி வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், வந்த வேகத்தில் மாணவி மீது பெட்ரொல் ஊற்றி உள்ளார். இதனையடுத்து, மாணவி மீது தீ வைத்துள்ளார். இதில், அவர் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில், அந்த இளைஞனும் அந்த தீயில் சேர்ந்து எரிந்தார்.

suicide by immolation shocking

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வைத்து தீயை அணைத்து, இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞன் குறித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த இளைஞன், இந்த 17 வயது இளம் பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த மாணவியை தீ வைத்து எரித்துவிட்டு, அவனும் சேர்ந்து எரிந்து தற்கொலை  செய்துகொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,  ஒருதலைக் காதலால் மாணவியைத் தீவைத்துக் கொளுத்திய ஒருதலைக் காதலன், தன் மீதும் தீ வைத்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.