பள்ளியில் படிக்கும் பெற்ற மகளையே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி தயார் ஒருவர் பணம் சம்பாதித்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வீட்டில் பகல் - இரவு என எந்நேரமும் ஆண்கள் பெண்கள் என அதிகம் பேர் வந்து செல்வதாகவும், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த இரு அறைகளில் இருந்து இரு ஆண்கள் அரை நிர்வாண கோலத்தில் தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, அங்குள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.

மேலும், அந்த வீட்டில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வரம் 4 மாணவிகளையும், ஒரு பெண்ணையும் போலீசார் மீட்டனர். இதில், அந்த பெண் மார்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லதா என்பது தெரிய வந்தது.

இந்த லதா, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கல்லூரி மற்றும் 12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு படித்து வரும் தனது 3 மகள்களையும், இளைய மகளின் பள்ளித் தோழியான ஒரு மாணவி என 4 பேரையும், இந்த பாலியல் தொழில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், பள்ளியில் படிக்கும் மகளையே பெற்ற தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பிழைப்பு நடத்தி வந்ததால், லதா உட்பட மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு ஆண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், “கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும்” தெரிவித்தனர்.

அதே நேரத்தில், மீட்கப்பட்ட 4 சிறுமிகளையும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன், அந்த 4 சிறுமிகளிடமும் பாலியல் ரீதியான உறவுகொண்டவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தயார் ஒருவர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தனது 3 மகள்கள் உட்பட மகளின் தோழியையும் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த சம்பவம், கன்னியாகுமரி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.