கணவன் - மனைவி சண்டையில் பஞ்சாயத்து செய்த உறவினர், கணவனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கணவன் - மனைவி சண்டை இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல், வீட்டுக்கு வீடு பிரச்சனைகளும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. இப்படியான கணவன் - மனைவி சண்டையில் பெரும்பாலும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் தான் தலையிட்டு, பிரச்சனை தீர்த்து வைப்பார்கள். 

அப்படிதான், காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.

இதனால், வேலை விசயமாகத் தனது மனைவியை தன்கூடவே தங்க வைக்க நினைத்த அந்த இளைஞர், தான் வேலை பார்க்கும் பகுதியிலேயே உள்ள உறவினர் மணி என்பவரின் வீட்டில் தனது மனைவியைத் தங்க வைத்து உள்ளார்.

அப்படி, உறவினர் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துகொண்டே இருந்தது. இதனால், அந்த வீட்டில் இருந்த உறவினர் மணி தான், நாள்தோறும் கணவன் - மனைவி சண்டையைத் தீர்த்து வைத்து, அவர்களைச் சமாதானப்படுத்தி, இருவரையும் அவ்வப்போது சேர்த்து வைத்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி சண்டை பெரிய அளவில் நடந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அந்த இளம் பெண், உறவினர் வீட்டிலேயே இருந்து உள்ளார். ஆனால், அந்த கணவன் அங்கு வராமல் கோபித்துக்கொண்டு சென்று விட்டார்.

இதனால், எப்போதும் போல் சமதானம் செய்யும் அந்த உறிவனர், “ இரு வீட்டாரிடமும் பேசி, நான் உன்னை உன் கணவனுடன் சேர்த்து வைக்கிறேன். நீ கவலைப்படாத மா” என்று, சொல்லி அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறு உள்ளார்.

அதன் படி, “கணவனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறி, அந்த இளம் பெண்ணை, அந்த உறவினர் பைக்கில் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, செல்லும் வழியில் அந்த பெண் மீது சபலப்பட்ட அந்த உறவினர் மணி, நடுவழியில் இரு சக்கர வாகனத்தை அந்த பகுதியில் உள்ள முட்புதர் பகுதிக்குள் சென்று உள்ளார்.

அங்கு, அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்று, அங்கு வைத்து, அந்த பெண்ணை மிரட்டியே அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, “இதனைப் பற்றி நீ வெளியே யாரிடமாவது எதாவது சொன்னால், உன்னையும் உன் கணவனையும் நான் கொன்று விடுவேன்” என்று, பயங்கரமாக மிரட்டி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “இத்தனை நாட்கள் நல்லவன் போல் நடித்து, எனக்கும் தன் கணவனுக்கும் அறிவுரைகள் சொல்லி எங்களைச் சேர்த்து வைத்த உறவினரே இப்படிச் செய்ததால், நாங்கள் என்ன செய்வது?” என்று, புலம்பிய படியே, சில நாட்கள் இருந்து உள்ளார். பின்னர், தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் மணியை, அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.