திருமணமான பெண், ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்ததால், கள்ளக் காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஓருவர் கணவனிடம் போட்டுக்கொடுத்த காரணத்தால், மற்றொரு காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள படப்பை ஊராட்சி, முருகாத்தம்மன்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 33 வயதான ராமு, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராமு, தனது மனைவி 31 வயதான ரேணுகா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இப்படியா நிலையில் தான் கடந்த 4 ஆம் தேதி ராமு, திடீரென்று மயமாகி உள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அங்குள்ள காவல்கழனி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசவே அங்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனர். அப்போது, அது  ராமு தான் என்பதை உறுதி செய்தனர். 

பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த தினேஷ், அவரது நண்பர்களான வினோத், சாலமங்கலம் பூவேந்திரன், பிரபாகரன், நரியம்பாக்கம் ஆகாஷ், வெங்கம்பாக்கம் சின்னராசு ஆகியோரை பிடித்து விசாரித்து உள்ளனர். 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது, “ நரியம்பாக்கத்தை சேர்ந்த 39 வயதான மணி, தனது மனைவி 35 வயதான மகாலட்சுமி உடன் வசித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்ட ராமுவிற்கும், இந்த மணியின் மனைவி மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த கள்ளக் காதல் விசயம் கணவன் மணிக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தனது மனைவியை கண்டித்து உள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில், கணவன் மணியை பிரிந்து, அவரது மனைவி தனியாக வசித்து வந்தனர். இந்த சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கள்ளக் காதலன் ராமு, காதலி மகாலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்.

அதே நேரத்தில், கணவன் மணியின் நண்பன் தினேஷு, பிரிந்த கணவன் - மனைவியை ஒன்று சேர்க்க வந்து, மகாலட்சுமியை அடிக்கடி சந்தித்துப் பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது, கணவன் மணியின் நண்பன் தினேஷுகும், மகாலட்சுமிக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒரே நேரத்தில் பழைய கள்ளக் காதலன் ராமுவும், புதிய கள்ளக் காதலன் தினேஷும் மற்றவர்களுக்குத் தெரியாமல், அடிக்கடி மகாலட்சுமின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற கணவன் மணி, தனது மனைவி மகாலட்சுமியுடன் சமரசம் பேசி, மீண்டும் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளார். 

இதன் காரணமாக, கள்ளக் காதலர்களான ராமுவும், தினேஷும் மகாலட்சுமியுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாமல் தவித்து வந்தனர். 

அப்போது, புதிய கள்ளக் காதலன் தினேஷ், “ உன் மனைவி மகலாட்சுமியுடன், ராமு என்பவன் மீண்டும் கள்ளத் தொடர்பு வைத்து, அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்துக்கொள்வதாக” போட்டுக்கொடுத்து உள்ளார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் மணி, கள்ளக் காதலன் ராமுவை கொலை செய்ய முடிவு செய்தார்.  

இதையடுத்து, மணியின் நண்பன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமுவை அவர்கள் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, ராமுவை கொலை செய்த மணி, அவரது மனைவி மகாலட்சுமி, புதிய கள்ளக் காதலன் தினேஷ் உள்பட மொத்தம் 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.