கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் வகுப்பு குளறுபடியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒருதலைக் காதலால் இளைஞன் ஒருவன் உடன்கட்டை ஏறி உயிரை விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ என்ற மாணவி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதுடன்,  மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவ மாணவிகள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பாடங்களைப் படித்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும், அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 

மேலும், முதலில் நித்யஸ்ரீக்கு ஆன்லைன் வகுப்பு தொடக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன.

இதனால், குழந்தைகளின் படிப்புகாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீயின் தந்தை, ஒரே ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி கொடுத்து உள்ளார். அந்த ஒரே ஒரு ஸ்மார்ட்போனை வைத்தே சகோதரிகள் 3 பேரும், மாற்றி மாற்றி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வந்தனர்.

குறிப்பாக, 3 பேருக்கும் காலையில் 10 மணிக்கு ஓரே நேரத்தில் வகுப்பு தொடங்கி மாலை வரை நடைபெறுவதால், அந்த போனில் ஒருவர் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் படிக்க முடிந்தது. இதனால், ஸ்மார்ட்போனில் மற்ற இருவரால் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நித்யஸ்ரீ, நேற்று கடந்த 1 ஆம் துதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தான், ஆத்தூரைச் சேர்ந்த ராமு என்ற இளைஞர், நித்யஸ்ரீயை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சம்பவம், வெளிசத்திற்கு வந்தது.

அதே நேரத்தில், நித்யஸ்ரீயின் இறுதி சடங்கில் யாருக்கும் தெரியாமலேயே ராமு கலந்துகொண்டு வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, நித்யஸ்ரீயின் உடலானது, மயானத்தில் எரியூட்டப்பட்டது. அப்போது, அவரது உடலை எரியூட்டத் தொடங்கியதும், அவரது தந்தை உட்பட உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ஆனால், அவர்களுடன் வந்த ராமு என்ற இளைஞன், அங்கு மறைந்து நின்ற நிலையில், மயானத்தில் அனைவரும் சென்ற பிறகு, மயான கொட்டகைக்கு வந்த ராமு, நித்யஸ்ரீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அதே தீயில் குதித்து தன் உடலை எரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காலையில் வீட்டை விட்டுச் சென்ற ராமு, மாலை வரை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி விட்டு, அங்குள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில், ராமு சிறுமியுடன் உடன்கட்டை ஏறிய தகவலும் கிடைத்துள்ளது. 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தடயவியல் வல்லுநர்களை வர வழைத்து மயானத்தில் எரிந்த எலும்புகளைச் சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆன்லைன் வகுப்பு குளறுபடியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒருதலைக் காதலால் இளைஞன் ஒருவன் உடன்கட்டை ஏறி உயிரை விட்ட சம்பவம், கள்ளக்குறிச்சி பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.