கள்ளக்குறிச்சி அருகே இளம் பெண்ணை திருமணம் செய்த ஒரே மாதத்தில், காதலன் மற்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்து உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் 22 வயது மகனான பூவரசன், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நர்மதா என்ற இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நெருங்கிப் பழகி வந்து உள்ளார். இதனால், நர்மதாவும் தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர் தானே என்று நினைத்து, பூவரசனுடன் நெருக்கமாக இருந்து உள்ளார். 

குறிப்பாக, அவர்கள் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து, பூவரசன் - நர்மதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த உல்லாச வாழ்க்கை சில நாட்கள் நீடிக்கவே, இதில், நர்மதா கர்ப்பமடைந்தார். இதனால், நர்மதாவின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. அடிக்கடி வாந்தி எடுக்க ஆரம்பித்தார். இதனைத் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர் பார்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, காதலன் பூவரசனிடம், “என்னை உடனே திருமணம் செய்து கொள்” என்று, நர்மதா வற்புறுத்தத் தொடங்கி உள்ளார். ஆனால், காதலன் பூவரசன் திருமணத்துக்கு மறுத்ததுடன், அதனை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து உள்ளார். ஆனால், “திருமணத்திற்குத் தாமதம் செய்தால் தனக்குத் தான் ஆபத்து என்று உணர்ந்துகொண்ட நர்மதா, உடனே திருமணம் செய்து கொள்ளும் படி”   பூவரசனை நச்சரிக்கத் தொடங்கி உள்ளார். இதனால், வேறு வழி தெரியாத காதலன், திடீரென்று தலைமறைவாகிப் போனார். 

இதனால், காதலன் தன்னை ஏமாற்றி விட்மான் என்று உணர்ந்த நர்மதா, வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, நர்மதாவின் பெற்றோர் அவரை காப்பாற்றி உள்ளனர். இதனையடுத்து, நர்மதாவின் பெற்றோர், தனது மகளிடம் “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளனர். இதனால், வேறு வழி இன்றி, தான் காதலன் பூவரசனால் ஏமாற்றப்பட்டு கர்ப்படைந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நர்மதாவின் பெற்றோர், பூவரசன் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பூவரசனை தேடி வந்தனர். 

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூவரசன், வேறு வழியின்றி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, “இளம் பெண் நர்மதாவை திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமடையச் செய்த குற்றத்திற்காக, நீ சிறை செல்ல நேரிடும் என்று போலீசார் எச்சரித்து உள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மனம் மாறிய பூவரசன், நர்மதாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். அதன்படி, இரு வீட்டார் பெற்றோரும், பூவரசன் - நர்மதாவிற்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். 

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பூவரசன் வீட்டில், இளம் பெண் நர்மதா மனைவியாக வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பூவரசனுக்கு ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் போது, சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தீபிகா என்ற இளம் பெண்ணுடன் காதல் இருந்ததும், அந்த காதல் திருமணத்திற்கு பிறகு தீபிகாவுடன் மீண்டும் காதல் தொடர்வதும் புது மனைவி நர்மதாவுக்கு தெரிய வந்தது. 

அதன்படி, கல்லூரி காதலி தீபிகா, தனது காதலன் பூவசரனுக்கு போன் செய்து உள்ளார். அப்போது, அந்த போனை நர்மதா எடுத்து பேசி உள்ளார். அப்போது பேசிய தீபிகா, “நான் பூவரசனின் காதலி பேசுகிறேன். நீ யார் இந்த போனை எடுப்பதற்கு?” எனறு கேட்டு உள்ளார். அதற்கு, நர்மதா, “நான் அவருடைய மனைவி பேசுகிறேன்” என்று, பதில் சொல்ல அடுத்தடுத்து இருவரும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனையடுத்து, இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத கல்லூரி காதலி தீபிகா, “பூவரசனை நான் காதலிக்கும் போது, நீ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?” என்று, நர்மதாவுடன் சண்டை போட்டு உள்ளார். இதனால், அவர்களுக்குள் சக்களத்தி சண்டை நடந்து உள்ளது.

இரண்டு பெண்களும் சண்டை போட்டு விட்டு ஒரு வழியாக போனை வைத்த பிறகு, பூவரசன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பூவசரனுடன் கேட்டு நர்மதா சண்டைக்கு சென்று உள்ளார். அதே நேரத்தில், பூவரசனுக்கு போன் செய்து பேசிய தீபிகா, “நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, உடனே என்னை வந்து திருமணம் செய்துகொள்” என்று கட்டளை போட்டு, மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, வீட்டிலிருந்து மாயமான பூவரசன், கல்லூரி காதலி தீபிகாவையும் அதே மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். அத்துடன், அங்குள்ள சிறுவங்கூர் பகுதியில் தீபிகாவுடன் தங்கி, பூவரசன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார். அதே நேரத்தில், பூவரசனை காணவில்லை என்று, மனைவி நர்மதா மற்றும் அவரது குடும்பத்தினர் பூவரசனை தேடி வந்து உள்ளனர். இந்த தேடுதலில் அவர்கள் சிறுங்கூரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, தனது பெற்றோருடன் அங்கு அதிரடியாக வந்த நர்மதா, பூவசரன் மற்றும் தீபிகா இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அதன் பிறகு, கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டது. 

அப்போது, கல்லூரி காதலி தீபிகாவின் பெற்றோருக்கு, காவல் நிலையத்தில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. இதனால் பதறிப்போன அவர்கள், விரைந்து வந்து மகள் தீபிகாவை சமாதானம் செய்து, தங்களுடன் அழைத்துச் சென்றனர். இப்படி ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்த பூவரசனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், 2 மனைவிகளுடனும் பூவரசன் வாழ முடியாமல், சிறையில் உள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.