சென்னையில்  கன மழை காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு சாலைகள் சுரங்கபாதைகள் மூடப்பட்டன.

surangamவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 4 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது .

சென்னையில் காற்றுடன் கனத்த மழை பெய்து வருவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.

இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்: மழையின் காரணமாக மூடப்பட்டுள்ள பாதைகள் வியாசர்பாடி ,கணேஷபுரம் ,அஜாக்ஸ் ,கொங்கு ரெட்டி ,மேட்லி ,துரைசாமி ,பழவந்தாங்கல் , தாம்பரம், அரங்கநாதன் , வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் மூடப்பட்டுள்ளது.