லிவ்விங் டூ கெதரில் கள்ளக் காதலர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், காதலி இறந்த சோகத்தில், கள்ளக் காதலியின் விட்டிலையே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கிழக்குத் தாம்பரம் மணிமேகலை தெருவைச் சேர்ந்த 37 வயதான ராபர்ட், திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

அதே நேரத்தில், தாம்பரம் அஸ்தினாபுரம் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த 34 வயதான தனலட்சுமி என்ற பெண், தனது கணவனை பிரிந்து தன்னுடைய 17 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரே பகுதியைச் சேர்ந்து குடும்பத்தைப் பிரிந்து வாழும் ராபர்ட் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர்களுக்குள் பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கள்ளக் காதல் முற்றிய நிலையில், ஒரு கட்டத்திற்குப் பிறகு தனலட்சுமி வீட்டிலையே காதலன் ராபர்ட் தங்கி ஒரே குடும்பமாக வாழத் தொடங்கி உள்ளனர். 

இந்த நிலையில் தான், தனலட்சுமிக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தனலட்சுமி எப்போது தனது போனில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டே இருந்து வந்துள்ளார். இதனால், தனலட்சுமியை காதலன் ராபர்ட் கண்டித்து உள்ளார். இதன் காரணமாக, காதல்கள் இருவருக்கும்  இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, “நான் கொடுத்த தொல்லையால் தான் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்” என்ற குற்ற உணர்வில் மிகவும் சோகத்தில் இருந்து வந்திருக்கிறார் காதலன் ராபர்ட். 

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலி தனலெட்சுமி வீட்டிற்கு வந்த ராபர்ட், வீட்டின் உள்ளே சென்று, உள் பக்கமாக தாழிட்டு உள்ளார். அதன் பிறகு, வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அங்கு காதலன் ராபர்ட் தூக்கில் சடலமாகத் தொங்கி உள்ளார். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்குக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நிலையில், காதலி இறந்த சோகத்தில், காதலியின் விட்டிலையே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.