“கணவர் வீட்டில் இல்லை.. நீங்கள் வீட்டுக்கு வாங்க..” என்று, இளம் பெண் ஒருவர் உல்லாசத்துக்கு அழைத்ததை நம்பி சென்ற நபருக்கு, பெரும் அதிர்ச்சி 
காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 7 வது தெருவை சேர்ந்த 39 வயதான செந்தில்குமார், அந்த பகுதியில் நியூஸ் பேப்பர் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகிறார். 

இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்று உள்ளார். அப்போது, ஆவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெர்சோனா என்ற இளம் பெண் அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

அவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, அவரை அடிக்கடி சந்தித்துப் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதான் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாகவும் பேசி இன்னும் பழகி வந்துள்ளனர்.

  இப்படியாக, இவர்களது பழக்கம் செல்போனில் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி 23 வயதான பெர்சோனா என்ற இளம் பெண், செந்தில் குமாரை செல்போனில் அழைத்து, “என் கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று, அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

  இதனால், பரவசப்பட்ட செந்தில் குமார், தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்று உள்ளார். அப்போது, தனது காரை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். 

  அப்போது, அந்த இளம் பெண்ணின் வீட்டில் அந்த இளம் பெண் உள்பட 4 பேர் இருந்து உள்ளனர். இதனால், வீட்டிற்குள் நுழைந்த செந்தில் குமாரை மிரட்டி, அவரது போனில் உள்ள “கூகுள் பே” ஆப் மூலமாக 13 ஆயிரம் பணத்தை, மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.

  அத்துடன், அவர் அணிந்திருந்த தங்க ஜெயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்பட கிட்டதட்ட 15 சவரன் தங்க நகைகள் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த 2 செல்போன்கள் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அவரை, விரட்டி அடித்து உள்ளனர்.

  இதனால், கடும் அதிர்ச்சியடைந்த செந்தில் குமார், மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு வந்ததும், அங்கிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.

  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஆவடி காந்தி நகர் எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த 25 வயதான சரவணன், பட்டாபிராம் லெட்சுமி நகர் முல்லை தெருவை சேர்ந்த 24 வயதான அஜித், ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

  அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரு முக்கிய குற்றவாளியான 23 வயதான பெர்சோனா மற்றும் அவரது கணவனையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.