“கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன்” என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல சரித்திர சாதனைகளைப் படைத்தர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டார். இதனையடுத்து, இத்தனை ஆண்டுக் கால இடைவேளைக்குப் பறிகு, தற்போது அவர் ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார்.

அத்துடன், தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருப்பதால், இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்திருந்தது. 

இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள ராகுல் டிராவிட், “உள்நாட்டில் 700, 800 ரன்களை அதிரடியாக சேர்க்கும் வீரர்கள், வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் அந்த வீரரின் திறமை எப்படி வெளியே தெரியும்?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.

அத்துடன், “இதனால், கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால், விளையாட வாய்ப்பு அளிக்காமல் நான் திரும்ப அழைத்து வரமாட்டேன் என்பதை  வீரர்களிடையே நான் நேரடியாகவே சொல்லிவிடுவேன்” என்று, கூறியுள்ளார். 

“ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்று விட்டு, விளையாடாமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்பதை நான் நன்றாகவே அறிவேன் என்றும், நான் அதுபோலவே இருந்திருக்கிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “15 பேருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றால், எதிரில் இருக்கும் அணி எப்படியாக இருந்தாலும் சுழற்சி முறையில் வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவேன்” என்றும், தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, “சில அண்டர் 19 போட்டிகளில் 5 முதல் 6 மாற்றங்கள் வரை நான் செய்வேன்” என்றும், ராகுல் டிராவிட் அதிரடியாக பேசி உள்ளார்.

“விளையாட்டை நேசிப்பவர்களுக்குச் சரியான பயிற்களை கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் பயிற்சியாளருக்கு உடற்பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அரை குறையாக அனைத்திலும் இருந்தால், நல்ல வீரர்களை உருவாக்க முடியாது” என்றும், அவர் வெளிப்படையாகவே ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.