“வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்” என்று, மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, “புதிதாகக் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன்” என்று, குறிப்பிட்டார்.

அப்போது, “ரஜினியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த 
மு.க.அழகிரி, “வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்” மு.க.அழகிரி கூறினார்.

மேலும், “தேர்தல் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது என்றும், அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்” என்றும், மு.க.அழகிரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மு.க.அழகிரி, “கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப் போடுவது கூட ஒரு பங்களிப்பு தான் என்றும், ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, “ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்றும், மு.க.அழகிரி கூறினார்.

அதே நேரத்தில், “வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்” என்றும், மு.க.அழகிரி முன்னதாக பேசியிருந்தார்.

முன்னதாக, “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று, கடந்த 1 ஆம் ஆதேதி மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

மேலும், தனிகட்சி தொடங்குவது தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் போன மாதம் 20 ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்களும் போன மாதம் தொடக்கத்தில் வெளியானது.

இது தொடர்பாக மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்களே அப்போது, உறுதியான தகவலைத் தெரிவித்திருந்தனர். அதன் படி, இன்னும் சில நாட்களில் மு.க. அழகிரி மதுரையில் உள்ள தனது ஆதரவாளர்கள், விசுவாசிகளை ஒருங்கிணைத்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து முக்கியமாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறினார்கள். 

குறிப்பாக, “மு.க. அழகிரி தனது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார்” என்றும் கூறப்பட்டு வந்தது. 

அதே போல, கடந்த சில மாதங்களாகவே மு.க. அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக சில புரளிகள் பரவியது. ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்று, பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

மதுரையைச் சேர்ந்த உள்ளூர் பாஜக பிரமுகர்கள், “ மு.க. அழகிரி பாஜகவுக்கு வந்தால், தாங்கள் வரவேற்பதாகவும்” கடந்த மாதம் கூறினார்கள். இதுவும், இணையத்தில் வைரலானது. 

இதனிடையே, எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கூறிய மு.க.அழகிரி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது போல், “ரஜினி வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை”என்று, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.