ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த விஜயலட்சுமி.  அளவுக்கு அதிகமான பிபி மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றதால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். சீமான் பற்றிய சில வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். 

தற்கொலை முயற்றி செய்வதற்கு முன், அவர்  வெளியிட்ட வீடியோவில், கடந்த 4 மாதமாகச் சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக அதிக மன அழுத்தத்தில் உள்ளேன்.  நான் கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக சீமான் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றது சரியல்ல. இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது, மேலும், ஹரி நாடார் ஜாதி பற்றிப் பேச வந்தார். சீமானுக்கு இந்த வாழ்க்கையைப் பிச்சை போட்ட பிரபாகரனின் ஜாதியைச் சேர்ந்த பெண் நான். பிள்ளைமார் கம்யூனிட்டி. அந்த வாழ்க்கையைப் பிச்சை எடுக்கும்போது எல்லாம் சீமானுக்கு எந்த ஜாதி என்று தெரியவில்லை. ஆனால் இன்று ஒரு பிள்ளைமார் பெண் வாழ்க்கையைச் சீரழிக்கும்போது, சமூக வலைத்தளத்தில் என்னை அவமானப்படுத்துவதில் ரொம்ப பெருமைப்படுகிறார்.

இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர், முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால், வாழ விடவில்லை. சீமான், ஹரி நாடார் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும்' எனக் கண்ணீர் வடித்தபடி அதில் கூறி வீடியோவை வெளியிட்டார். 
 
மேலும், இது தொடர்பாக, விஜயலட்சுமியைச் சந்தித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராமன், அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம் என்று தெரிவித்தார். 
இதனையடுத்து, நடிகை விஜயலட்சுமியிடம் நீதிபதி விசாரணை நடத்தப்பட்டது. விரைவு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், மருத்துவமனையில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். 

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதற்கான காரணம் புரியவில்லை. இன்று காலை, என் பிபி அளவு அதிகரித்ததால் என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் சரிந்து மயங்கி விழுந்தேன். இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. இது பற்றி அறிந்த பிறகு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, என்னை வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு தாக்கம் செய்யப்பட்டது. சீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. நான் நாடகம் எதுவும் போடவில்லை. காயத்ரி ரகுராம் என் அனுமதியே இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார். அன்று எனக்கு ஆதரவாக இருந்து காயத்ரி ராகுராம் தற்போது என்னுடன் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

-பெ.மதலை ஆரோன்