இளம் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், காதல் என்ற பெயரில் பணத்துக்காக பல இளைஞர்களைத் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தான், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்.

தெலங்கானா மாநில காவல் துறையில் பணியாற்றி வரும் 30 வயதான சந்தியா ராணி, என்கிற பெண் கான்ஸ்டபிள், அந்த பகுதியின் காதல் ராணியாகவே வலம் வந்திருக்கிறார்.

தெலங்கானாவைச் சேர்ந்த சரண் தேஜ் என்ற இளைஞர், ஐதராபாத் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “நான் வேலைத் தேடி ஐதராபாத் வந்தேன் என்றும், அப்போது 30 வயதான பெண் போலீஸ் சந்தியா ராணி என்பவர், காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “என்னை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் போலீஸ் சந்தியா ராணி, ஐதராபாத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் தலைமையகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் என்றும், இவருக்கு ஏற்கெனவே 3 இளைஞர்களுடன் திருமணம் நடந்து உள்ளது என்றும், அதில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது” என்றும், அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், இந்த 3 திருமணத்தில், 2 திருமண பந்தம் சட்டப்படி விவாகரத்தில் முடிந்து உள்ளது என்றும், குடும்ப தகராறு காரணமாக ஒரு கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்து உள்ளார்” என்றும், அவர் அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.

இப்படியான நிலையில், “பெண் போலீஸ் சந்தியா ராணி, என்னை காதலிப்பது போல் நடித்து, மோசடியாக ஏமாற்றி 4 வதாக என்னை திருமணம் செய்துகொண்டார்” என்றும், அந்த புகார் மனுவில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அப்போது, “வேலைத் தேடி ஐதராபாத்துக்கு வந்த சரண் தேஜை, பெண் காவலர் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில், காதலியான பெண் காவலர் சந்தியா குறித்து எதுவும் தெரியாமல் சரண் தேஜ், நெருங்கி பழகி வந்திருக்கிறார். பின்னர், இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, சரண் தேஜிவிக்கு சந்தியாவின் உண்மை முகம்” தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து, “சந்தியாவிடம் இருந்து விலகி செல்ல சரண் தேஜ் நினைத்து உள்ளார். அப்போது, தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி அவர் சரண் தேஜை மிரட்டத் தொடங்கி உள்ளார். 

குறிப்பாக, அந்த பெண் காவலர், தனது சாதியை சுட்டிக்காட்டி பெண்களுக்கு எதிரான பி.சி.ஆர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உன்து வாழ்க்கையை நாசம் செய்துவிடுவேன்” என்று மிரட்டி உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, “திருமணத்திற்குப் பிறகு, 4 வது கணவன் சரண் தேஜை பூட்டி அறையில் வைத்து போலீஸ் ட்ரீட்மெண்டை காட்டியிருக்கிறார். இதற்கு மேல் இந்த பெண் போலீஸ் சந்தியாவுடன் குடும்பம் நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்த சரண், வீடியோ பதிவு மூலம் ஜதராபாத் காவல் ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல் நிலையத்துக்கு வாட்ச்ஆப்பில் தன்னுடைய நிலையைக் கூறி புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில், “பெண் போலீஸ் சந்தியா ராணியிடம் இருந்து தன்னை காப்பாற்றுங்கள்” என்றும், அவர் மன்றாடியதும், விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது, இது தொடர்பாக பெண் போலீஸ் சந்தியா ராணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர். 

முக்கியமாக, பெண் போலீஸ் சந்தியா ராணியின் நடவடிக்கைகள் குறித்து அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, “நாங்கள் எங்கள் மகளை எவ்வளவோ கண்டித்தும். நாங்கள் எவ்வளளோ சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. பணத்துக்காக அவள் இப்படி செய்கிறாள்” என்று, அவரது குடும்பத்தினரே குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், பெண் போலீஸ் சந்தியாவை இப்படியே விட்டால், அவள் இன்னும் நிறைய இளைஞர்களை ஏமாற்றுவாள் என்றும், அவளுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும், காவல் துறையில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட 4 வது கணவன் சரண் தேஜ் தன்னுடைய ஆதங்கத்தை தற்போது வெளிப்படுத்து உள்ளார். இச்சம்பவம், தெலங்கானா மாநில சக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.