ராங்கால் சாட்டிங்கில், ஆண் நண்பருடன் அக்கா - தங்கை இருவரும் தகாத உறவு வைத்திருந்ததை, அந்த நபர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த 

பெண்களின் கல்யாணத்திற்குப் பிறகு பணம் கேட்டு மிரட்டியதால், கணவர்கள் இருவரும் தங்களது மனைவிகளை அடித்துத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கொளத்தூர் பகுதியை ரேச்ந்த செந்தில் குமார் என்பவர், அந்த பகுதியில் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், அதிக நேரம் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்து வந்தார். 

அந்த சமயத்தில், திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, செந்தில்குமாருடன் நட்பாக அறிமுகமாகி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவருடன் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்த நிலையில், அந்த பெண்ணை பார்க்க செந்தில்குமார் கோவைக்கு சென்று உள்ளார். 

இருவரும் கோவையில் சந்தித்துக்கொண்ட நிலையில், அந்த பெண்ணுடன் செந்தில்குமார் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இப்படியாக, அடிக்கடி அந்த பெண்ணுடன் கோவைக்குச் சென்று, அவர் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இதனையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அந்த பெண்ணும், திருமணத்திற்குப் பிறகு, கணவன் வீட்டிற்கு சென்று விட்டதால், செந்தில்குமார் உடன் சாட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டார். 

பின்னர், சில மாதங்கள் சென்ற பிறகு, அம்மா வீட்டிற்கு வந்த அந்த பெண், தனது தங்கையின் செல்போனிலிருந்து செந்தில் குமாருக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதன் பிறகு, மீண்டும் அவர் தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டார். கணவர் வீட்டிற்குச் சென்றதும், அந்த பெண் எப்போதும் போல், செந்தில்குமாருடன் சேட்டிங் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால், அதன் பிறகு, அந்த பெண்ணின் தங்கையின் செல்போனுக்கு தொடர்புகொண்ட அந்த செந்தில்குமார், அக்காவை பேசி தனது வலையில் வீழ்த்தியது போலவே, தங்கையிடமும் பேசி சாட்டிங் செய்து, தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். திட்டமிட்டபடி, அந்த தங்கையையும், தனது காம வலையில் வீழ்த்தி, அந்த பெண்ணிடமும் பல முறை செந்தில்குமார் உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

குறிப்பாக, அக்கா - தங்கை இருவரிடமும் உல்லாசமாக இருந்ததை, செந்தில்குமார் தனது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும்  எடுத்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார். 

அந்த நேரத்தில், தங்கைக்கும் திருமணமாகி அவரும் தனது கணவர் வீட்டிற்கு சென்று உள்ளார். இதனால் அக்கா - தங்கை இருவரும், செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதையும், அவருடன் பேசுவதையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

பின்னர், சில நாட்கள் சென்ற பிறகு, சகோதரிகள் இருவரின் செல்போனுக்கும் புதிய நம்பரில் இருந்து மர்ம நபர் போல் பேசிய செந்தில்குமார், “உங்களின் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் என்னிடம் இருக்கிறது. பணம் கொடுத்தால் அதை அழித்து விடுகிறேன். இல்லை என்றால், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று, மிரட்டி இருக்கிறார்.

இதனால், பதறிப்பொன அக்கா - தங்கை இருவரும் உடனடியாக செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, “நாம் உல்லாசம் அனுபவித்ததை யாரோ நமக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள்” என்று கூறி, அழுதுள்ளனர்.

அத்துடன், செந்தில்குமாரை நேரில் வரவழைத்து “40 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும்” கொடுத்து, சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்து அந்த வீடியோவையும், போட்டோக்களையும் அழித்து விடுமாறு கூறி உள்ளனர். 

பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்ட அவர், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போதுதான், பணம் கேட்டு மிரட்டுவது செந்தில்குமார் என்பதை அவர்கள் கண்டுப்பிடினத்தர். இதனால், பயந்து போன அக்கா - தங்கை இருவரும், திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். 
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், செந்தில் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, தீவிர விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, சகோதரிகளின் இருவரின் நடத்தையிலும், அவர்களது கணவன்களுக்கு  சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து, அவர்களிடம் அவர்களது கணவர்கள் இருவரம் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர்கள் செந்தில்குமாருடன் சாட்டிங் பழக்கம் பற்றிக் கூறி உள்ளனர். இதனால், கடும் கோபம் அடைந்த கணவர்கள் இருவரம், சகோதரிகள் இருவரையும் அடித்து, அவரது பெற்றோர் வீட்டிற்கே விரட்டி அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.