கள்ளக் காதலனுடன் உல்லாசம் இருந்தபோது நேரில் பார்த்த கணவனை, மனைவி எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகில் உள்ள இடையன் குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று, 40 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவரின் சடலமானது, எரிந்த நிலையில் கிடந்து உள்ளனர்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த நிலையில் கிடந்த நபரின் எலும்புகளைச் சேகரித்து, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாகத் தனிப் படை அமைத்து தீவிரமான விசாரணை மேற்கொண்டனர். 

அதே நேரத்தில், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், கொலை செய்யப்பட்டது தேனி மாவட்டம் கூடலூர் அடுத்து உள்ள போயன்மார் தெருவைச் சேர்ந்த 42 வயதான நாகராஜ் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, நாகராஜ் இறப்பு குறித்து, அவருடைய மனைவியான 37 வயதான முத்துமாரியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உள்ளனர். இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் தங்களுக்கே உண்டான பாணியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. 

அதாவது, எரித்துக் கொலை செய்யப்பட்ட நாகராஜ் மனைவி முத்துமாரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது. 

இதனால், அடிக்கடி அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனை, தற்செயலாக வீட்டிற்கு வந்த கணவன் நாகராஜ், நேரில் பார்த்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியைக் கண்டித்து எச்சரித்து உள்ளார். 

“தன் கணவனுக்கு உண்மை தெரிந்து விட்டது, இப்படியே விட்டால், தங்களது கள்ளக் காதலுக்கு இனி இடையூறு தான்” என்று, முடிவு செய்த முத்துமாரி, கணவன் நாகராஜைக் கொலை செய்ய முடிவு செய்தனர். 

அதன் படி, மனைவி முத்துமாரி, கள்ளக் காதலன் செல்வராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நாகராஜைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். 

அதன் படி, சம்பவத்தன்று நாகராஜுக்கு அளவுக்கு அதிகமாகக் குடிக்க வைத்து உள்ளனர். இதில், அவர் கடும் போதையாக்கிச் சென்ற நிலையில், அவரது கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர்.

அதன் பிறகு, உயிரிழந்த கணவனின் உடலைக் கொஞ்சம் தூரம் எடுத்துச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பெட்ரோலை ஊற்றி, எரித்து விட்டனர். இதனால், அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவரது உடலானது கருகிய நிலையில் கிடந்து உள்ளது. 

இதனையடுத்து, கணவனைக் கொலை செய்த மனைவி முத்துமாரியை, போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் செல்வராஜை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்ப ஏற்பட்டது.