திருமணத்தன்று முதலிரவின்போது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நீதிவாசனுக்கும், அந்த பகுதியில் உள்ள சடையங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற இளம் பெண்ணிற்கும் நேற்றும் அவர்களது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

Husband kills wife on first night and commits suicide

ஆனால், திருமணம் முடிந்த கையோடு பல விதமான கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடன் முதலிரவில் நுழைந்த புதுமண பெண்ணிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.

புதுமண தம்பதிகளுக்கு முதலிரவு என்பதால், இருவீட்டார் பெற்றோரும் வெளியே படுத்திருந்த நிலையில், முதலிரவு அறைக்குள் காலடி எடுத்துவைத்தார் சந்தியா. 

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1591872742fas.JPG

உள்ளே இருந்து மாப்பிள்ளை நீதிவாசன் பெண்ணை வரவேற்ற நிலையில், சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சிறுது நேரத்திலேயே, மாப்பிள்ளை நீதிவாசன் முதலிரவு அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடி உள்ளார்.

இதனால், வெளியே படுத்திருந்த அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, முதலிரவு அறையின் உள்ளே சென்று பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கே, மணப்பெண் சந்தியா, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், கட்டப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

Husband kills wife on first night and commits suicide

இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த இருவீட்டார் பெற்றோரும், நீதிவாசன் ஓடிய திசைநோக்கி ஓடி, அவரை தேடி உள்ளனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில், நீதிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த இருவீட்டார் பெற்றோரும் என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பிப்போனார்கள். 

Husband kills wife on first night and commits suicide

இது குறித்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிராதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவீட்டார் பெற்றோரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணமான முதல்நாள் இரவிலேயே மனைவியை கொன்றுவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.