மனைவியின் கள்ளக்காதலனின் கையை வெட்டி, மனைவிக்கே கணவன் பரிசளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலசுப்ரமணி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Husband gifts wife her lover hands for illicit affair

இதனிடையே, ராணிப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் மனைவி உடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. 

தமிழரசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் அடிக்கடி சிறை சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

அதன்படி, ஒரு குற்ற வழக்கில் தமிழரசன் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி கருவுற்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, விடுதலையான தமிழரசன், தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்தார். 

Husband gifts wife her lover hands for illicit affair

அதன்படியே, தமிழரசனின் மனைவி, கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவருடன் கள்ளத் தொடர்பிலிருந்து இருவரும் தனியாக உல்லாசம் அனுபவித்து வந்ததை, அவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து, மனைவியை அவர் எச்சரித்ததாகவும் தெரிகிறது. ஆனால், பாலசுப்ரமணி உடனான கள்ளக் காதலை, அவர் மனைவி விட மறுத்ததால், ஆத்திரமடைந்த தமிழரசன், பாலசுப்ரமணியை கொலை செய்யத் திட்டமிட்டார்.

கடந்த 3 ஆம் தேதி சம்பவத்தன்று, பாலசுப்ரமணியை மது குடிக்க அழைத்துச் சென்ற தமிழரசன், அவருக்கு மதுவை வாங்கிக் கொடுத்து கடும் போதைக்குத் தள்ளி உள்ளார். பாலசுப்ரமணி, நல்ல போதை ஆனதும், அவரது கையை துண்டித்து அவரை கொலை செய்துள்ளார். 

Husband gifts wife her lover hands for illicit affair

பின்னர், துண்டிக்கப்பட்ட அந்த கையை கொண்டு வந்து தன் மனைவிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். அத்துடன், “ உன்னுடன் யார் கள்ளக் காதல் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் இதுதான் கதி” என்று மனைவியை எச்சரித்துள்ளார்.

இதனால், பயத்தில் உரைந்துபோன அவரது மனைவி அப்படியே உயிர் பயத்தில் உரைந்துபோனார். இதனையடுத்து, தலைமறைவான தமிழரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கள்ளக் காதல் கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே, மனைவியின் கள்ளக்காதலனின் கையை வெட்டி, மனைவிக்கே கணவன் பரிசளித்துள்ள சம்பவம், கிருஷ்ணகிரியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.