கணவர் அடித்ததால் கொழுந்தனாரின் மகனுடன் சென்ற மனைவி! அவரும் அடித்ததால் இளைஞனுடன் சென்ற அவலம்

கணவன் அடித்ததால் கொழுந்தனாரின் மகனுடன் சென்று குடும்பம் நடத்தி வந்த மனைவியை, அவரும் அடித்ததால், வேறொரு இளைஞனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலு காமெடியைப் போல ஒரு உண்மை சம்பவம், ஈரோடு மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரனுக்கும், 25 வயதான மஞ்சு என்ற இளம் பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரனின் சகோதரின் மகனான 29 வயதான மதன் என்ற இளைஞன், அந்த பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். அப்போது, மதன் அடிக்கடி மகேஸ்வரனின் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

அப்போது, மதனுக்கும் - மஞ்சும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த இளைஞன் மஞ்சு உடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்.

அப்போது, மஞ்சுவும் கொழுந்தானார் மகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் எப்படியோ கணவன் மகேஸ்வரனுக்கு தெரிய வந்த நிலையில், அவர் தனது மனைவியை அழைத்துக் கண்டித்து இருக்கிறார். 

இதனால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், “ கள்ளக் காதலை கைவிடச் சொல்லி” கணவன் மகேஸ்வரன் தனது மனைவியை அடித்து உதைத்திருக்கிறார். 

இதனால், கோபப்பட்ட மஞ்சு, தனது கணவனை பிரிந்து ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியில் கொழுந்தனார் மகனுடன் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்தார். 

இப்படியாக, அவர்கள் சில நாட்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கொழுந்தானர் மகன் மதனும், தினமும் குடித்து விட்டு வந்து மஞ்சுவை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால், இன்னும் நொந்துபோன மஞ்சு, அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜன் என்ற என்ற இளைஞனுடன் ஆறுதலாகப் பேச போய், பின்னர் அவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு, அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார். 

இப்படியாக, மஞ்சுக்கும், அந்த இளைஞனுக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு, இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததை, மதன் நேதில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, மஞ்சுவை அடித்து உதைத்து இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மஞ்சு, மதனை கொலை செய்து விட்டு, ராஜன் உடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்திருக்கிறார். அனத் படி, கள்ளக் காதலன் ராஜனும், அதற்கான வழியை மஞ்சுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். 

இதனையடுத்து, மது போதையில் வீட்டிற்கு வந்த மதனின் கழுத்தைப் பிடித்து மஞ்சு நெரித்திருக்கிறார். 

அப்போது, அந்த வீட்டிற்குள் மறைந்திருந்த கள்ளக் காதலன் ராஜன், ஓடி வந்து மதனின் கழுத்தைப் பிடித்து நெரித்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகே, ராஜன் அங்கிருந்து அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார் .

இதனையடுத்து, நாடகமாடிய மஞ்சு, தனது உற்றவர்களை அழைத்து “மதன் அதிக குடிபோதையில் வீட்டிற்கு வந்து மயங்கி விட்டார்” என்று அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்து, “மதனின் கழுத்தில் காயம் இருப்பதால்” மருத்துவர்கள் இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். 

இதனால், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மஞ்சுவை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, “கள்ளக் காதலனுடன் உடன் சேர்ந்து மதனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை” மஞ்சு ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீசார் கள்ளக் காதலர்கள் இருவரையும் கைது செய்தனர்.