நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்து அறுத்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே உள்ள காவேட்டிபட்டி குப்பம்பாளையத்தைச் சேர்ந்த ராஜவேல், அதே ஊரில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும், சுஜிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணமாகி சில வருடங்கள் மட்டுமே இருவரும் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. 

Tamil Nadu husband arrested after attempt to murder wife in Namakkal

இதனையடுத்து, இவரும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாகச் சண்டை போட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல், இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜவேல், வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தை அறுத்து, அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில், பயத்தில் சுஜிதா அலறி சத்தம்போட்டுக் கத்தி உள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடி, ராஜவேலுவை தள்ளிவிட்டு, அவரிடமிருந்து  சுஜிலாவை மீட்டுள்ளனர். இதற்குள், அவரது கழுத்து அறுபட்டு, ரத்தம் வெளியேறி உள்ளது. 

இதனையடுத்து, அவர் அவசர அவ்வரசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tamil Nadu husband arrested after attempt to murder wife in Namakkal

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவன் ராவேலுவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவனே மனைவியைக் கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.