ஓசூர் அருகே 62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள கப்பக்கல் கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நஞ்சம்மா என்ற மூதாட்டி, தனது கணவரை இழந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். அத்துடன், தனது வாழ்வாதாரத்திற்காக இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று வழக்கம் போல் அந்த பகுதியில் உள்ள ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் தனது ஆடுகளை அந்த மூதாட்டி மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார். அதன் பிறகு, அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலைகளின் தேவையற்ற பொருட்களைப் பழைய இரும்பு கடையில் போடுவதற்காக அவர் எடுத்துச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த மூதாட்டி தனியாக செல்வதை நோட்டம் இட்ட மர்ம நபர்கள் சிலர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்று உள்ளனர்.

அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், அந்த மூதாட்டி கடந்து சென்றுக்காண்டிருந்த நிலையில், பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் வாயை மூடி, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அப்போதும், அந்த மூதாட்டி, அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடி உள்ளார். இந்த போராட்டத்தில், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், இந்த மூதாட்டியை இப்படியே விட்டால், தங்களுக்கு ஆபத்து என்று உண்ணி, அந்த மூதாட்டியைக் கழுத்தை இறுக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்து உள்ளனர்.

அத்துடன், அந்த மூதாட்டி கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் கம்மலை பறித்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

அதே நேரத்தில், வெளியில் சென்ற தனது அம்மா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், பயந்து போன அவருடைய மகன் சம்பங்கி ராமய்யா, நஞ்சம்மாவை தேடிச் சென்று உள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு வயல்வெளி பகுதிகளில், தனது தயார் கொலை செய்யப்படு கிடந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். 

இதனையடுத்து, சம்பங்கி ராமைய்யா தனது தாயார் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது குறித்து, அங்குள்ள மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொலை வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி 

வருகின்றனர். அத்துடன், மூதாட்டி நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று, தெரிவித்துள்ளது.

இதனிடையே, 62 வது மூதாட்டி ஒருவர் பல்லு போன பிறகும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.