முத்தம் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை கணவன் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசித்து வரும்  அன்சாரி, வேலைக்குச் செல்லாமல் நாள் தோறும் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், பொறுமையை இழந்த அவருடைய மனைவி தஸ்லீம், அவருடன் சண்டைக்குப் போய் உள்ளார்.

trying to kiss

சண்டையின் முடிவில், தனது கணவரைத் திருத்துவதாக நினைத்து, அவருக்கு அன்பாக அறிவுரை சொல்லியிருக்கிறார். அப்போதும் அவர் கோபமாக இருந்ததால், அவருக்கு முத்தம் கொடுத்து, அவரது கோபத்தைத் தணிக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, திடீரென்று மனைவியின் நாக்கை கையால் பிடித்துக்கொண்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், நாக்கை அறுத்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், உடனடியாக தனது சகோதரிக்கு வீடியோ கால் மூலம் போன் செய்து, சைகையிலேயே, சொல்லி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், விரைந்து வந்து தஸ்லீமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம், நாக்கு மீண்டும் இணைக்கப்பட்டது. 

trying to kiss

இதனையடுத்து தஸ்லீமின் சகோதரி அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள அன்சாரியைத் தேடி வருகின்றனர். இதனிடையே, குஜராத்தில் முத்தம் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை கணவன் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.