செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பள்ளியில் படிக்கும்போதே காதல் என்ற பெயரில், சிறுமியை பல ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து  ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்து உள்ள வல்லாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் ஒருவர், இவர் அந்த பகுதியில் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே, அதே பகுதியை நேர்ந்த நிர்மல்ராஜ் என்ற இளைஞன், அந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக அந்த பெண் பள்ளியில் படிக்கும் போதே, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. காதல் என்ற பெயரில், கிட்டதட்ட பல ஆண்டுகளாக அந்த பெண்ணை, நிர்மல்ராஜ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து, நிர்மல்ராஜ் படிப்பை முடித்த நிலையில், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் லேப் டெக்னிஷியனாக பணியில் சேர்ந்து உள்ளார். அந்த பெண்ணும் படிப்பை முடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு தற்போது 22 வயது ஆகும் நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, “காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்து என்னுடன் உல்லாசம் அனுபவித்து என்னை நிர்மல்ராஜ் ஏமாற்றியதாக” பாதிக்கப்பட்ட  இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிர்மல்ராஜை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, காதலித்து உல்லாசம் அனுபவித்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, நிர்மல்ராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

அதே போல், நாகர்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவி மாயமானதை அடுத்து, போலீசார் அவரை தீவிரமாகத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் 51 வயது சபிதா என்பவரின் மகள் 19 வயதான ரேஷ்மா, நாகர்கோவிலில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் இளம் பெண் ரேஷ்மா, நாகர்கோயிலில் உள்ள தனது தோழி வீட்டுக்குச் சென்று வருவதாக அம்மாவிடம் கூறி விட்டுச் சென்று உள்ளார். ஆனால், இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன அவரது தாயார் மகள் சபிதாவை, அந்த பகுதியில் பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால், எங்கும் தேடியும் ரேஷ்மா கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட் ஆப் என்று வருகிறது. 

இதனால், பயந்துபோன அவரது தயார் சபிதா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான இளம் பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்துடன், ரேஷ்மாவின் சக தோழிகளிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். “ரேஷ்மாவிற்கு காதல் எதாவது இருக்கிறதா?” என்ற கோணத்திலும் போலீசா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.