தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ்வழியில் படித்து உரிய தகுதியுடைய கிராமப்புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு அரசுத் தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீட்டில் திருத்தங்கள் செய்ய கோரி கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டது .

கடந்த எட்டு மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதவிற்கு, எப்போது ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என்று உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் 
பல்வேறு அரசியல் கட்சியினரும் இதனை வலியுறுத்தி வந்தனர். 

இந்த இட ஒதுக்கீடு பயனைடையகல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே பயன் அடைய முடியும். 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும்.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வழங்கு இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருக்கிறார். 
.