மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் அறிவித்த திட்டங்களில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திட்டம் அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY) . கடந்த 2015 ஜூன் மாதம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. 


இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்களின் மூலம் கணக்கை தொடங்கலாம்.  ஒவ்வொரு மாதமும் குறைந்தது 42 ரூபாய் முதல் 210 வரை செலுத்தலாம். 42 ரூபாயை ஓய்வுதிய பங்களிப்பாக செலுத்தி வந்தால் 60 வயதிற்கு பின்பு 1000 ரூபாயும், 210 ரூபாய் செலுத்தி வந்தால் 5000 ரூபாயும் பென்சன் பணமாக பெற முடியும். 


எந்த வங்கியில் பென்ஷன் கணக்கினை துவங்கியிருந்தால் கூட பின்னர் இதனை வேறு வங்கி கிளை மாற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் கணக்கு தொடங்கப்பட்ட தேதியில் வங்கி கணக்கில் இருந்து பங்களிப்பு தொகை எடுத்துக்கொள்ளப்பட்டும். இதற்காக தனியாக வங்கி சென்று பணம் செலுத்த வேண்டியது இல்லை. கணக்கை தொடங்கிய பிறகு பணத்தைச் செலுத்த தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.