17 வயது சிறுமியை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது தாத்தாவை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பழவிளை அடுத்த பூச்சிவிளாகத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த 17 வயது சிறுமி, தன் தயார் மற்றும் தன்னுடைய தங்கையுடன் வசித்து வருகிறார்.

17 yo girl sexually assaulted and threatened by 50 yo man

அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த சிறுமி, வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். 

அத்தடன், இது கொரோனா காலம் என்பதால் சிறுமியின் தாயர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் தனியாக வீட்டிலிருந்து வந்துள்ளார்.

அப்போது, பக்கத்தில் வீட்டில் உள்ள 50 வயதான அப்பன் ராஜ், சிறுமியிடம் நன்றாகப் பழகி வந்துள்ளார். சிறுமியும் ஆசை ஆசையாக வார்த்தைக்கு வார்த்தை “தாத்தா தாத்தா” என்றே பழகி வந்துள்ளார்.

தந்தை இல்லாத நிலை, தாய் தினமும் கூலி வேலைக்குச் செல்லும் சூழல், சிறுமியின் பாசமான வார்த்தைகள் என எல்லாவற்றையும் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட அப்பன் ராஜ், சிறுமியை ஆபாசமாகவும், அரை நிர்வாணமாகவும் தனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு, அதை இணையத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

17 yo girl sexually assaulted and threatened by 50 yo man

சிறுமியும், மானத்திற்குப் பயந்து, அப்பன் ராஜ் சொல்படியே கேட்டு நடந்து வந்துள்ளார். அத்துடன், “இது குறித்து வெளியே சொன்னால், உன் அம்மாவையும் தங்கையும் கொலை செய்துவிடுவேன்” என்றும் அந்த சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அப்பன் ராஜின் பாலியல் தொல்லையால் வலி பொறுக்க முடியாத சிறுமி, தனது தாயாரிடம் அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், அப்பன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 50 வயது தாத்தா 17 வயது சிறுமியை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.