திருடன் மீது காதல் மலர்ந்த நிலையில், காதலனின் பிரிவைத் தாங்க முடியாமல் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், திருடன் மீது கொண்ட காதல் ஏக்கத்தால், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணாசாலை வடக்குத் தெருவில் பஞ்சவர்ணம் என்ற பெண்மணி, வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் சீமான், சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

பஞ்சவர்ணம் - சீமான் தம்பதிக்கு 16 வயதான ஒரு மகனும், 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

அதே நேரத்தில், பஞ்சவர்ணம் இதற்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் அருகே இருக்கும் சிறுகம்பையூர் கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது, அங்குள்ள ஆர்எஸ் மங்கலம் அருகில் இருக்கும் அறியாத மொழி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது திலீபன் என்ற இளைஞன், தனது சித்தியைப் பார்ப்பதற்காக சிறுகம்பை கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார்.

அப்போது, திலீபனுக்கும் பஞ்சவர்ணத்தின் மகள் ரோஷிணிக்கும் இடையே பழக்கம் ஏற்ப்டடு, பின்னாளில் அது காதலாக மாறி உள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து வந்தனர்.

இப்படியாக, இவர்களது காதல் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென ரோஷிணியைக் காணவில்லை என்று, அவரது தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், திலீபனையும் - ரோஷிணியையும் கண்டுபிடித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து தான், பஞ்சவர்ணம் தனது அந்த வீட்டை காலி செய்துவிட்டு, தேவகோட்டைக்கு குடி பெயர்ந்தார். 

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அந்த சிறுமி ரோஷிணி மாயமாகி உள்ளார். 

மீண்டும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திலீபனுடன் சேர்த்து போலீசார் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்தனர். ஆனால், சிறுமியை அவரது தாயாருடன் அனுப்பாமல், இந்த முறை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, கொரோனா விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை முன்னிட்டு, சிறுமியான ரோஷிணியின் எதிர் காலம் கருதியும், ரோஷிணியை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், வீடு திரும்பிய நிலையில், காதலன் திலீபனை மறக்க முடியாமல் அந்த சிறுமி தவித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, தாயார் பஞ்சவர்ணம் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று உள்ளார். வீட்டில் இருந்த மகன் பள்ளிக்குச் சென்று விட்டார். அன்று மாலை சிறுமியின் அண்ணன் பள்ளி சென்று விட்டு, வீடு திரும்பிய நிலையில், வீட்டில் இருந்த தங்கை ரோஷிணி, மின் விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்த அண்ணன், அங்கேயே கதறி அழுதுள்ளார்.

மேலும், தற்கொலை செய்துகொள்ளும் முன் அந்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்து உள்ளார். அதில், “எனது தற்கொலைக்கு எனது பெற்றோர் காரணமில்லை. காதலன் பிரிவை என்னால் தாங்க முடியாத நிலையில் நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று, அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. 

இதனையடுத்து, கோயிலக்கு சென்றுவிட்டு தாயார் பஞ்சவர்ணம் வீடு திரும்பிய நிலையில், மகளின் இந்த நிலையைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “காதலன் பிரிவை தாங்காமல் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக” தெரிவித்தனர்.

அதே நேரத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், “காதலன் திலீபன், பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியவர் என்றும், தற்போது ஒரு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்” என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.