விழுப்புரத்தில் அப்பாவை அம்மாவின் உதவியுடன் மகளே கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, மகளின் கள்ளக் காதலை தட்டிக்கேட்டதால் தான், இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வட வாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான தனசேகரன், சின்னகள்ளிபட்டு பகுதியிலுள்ள அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். 

தனசேகரன் வீட்டில் அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் ச9த்யா ஆகியோரும் இருந்து வந்தனர்.

இதனையடுத்து, தன் மகளுக்குத் திருமண வயது வந்து விட்டதே என்று எண்ணிய தனசேகரன், கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குண்றத்தை சேர்ந்த குமார் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். குமார், அந்த பகுதியில் ஒரு கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

திருமணமாகி சில நாட்கள் மட்டுமே அவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே புது மண தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்தது.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், கணவர் குமாரின் நண்பரான புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 35 வயதான முருகவேல் என்ற நபர், குமார் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். முருகவேலும் ஒரு கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

முருகவேல் வேலை விஷயமாக அடிக்கடி குமார் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். அப்போது தான் கணவன் மேல் வெறுப்பில் இருந்த சத்யா, கணவரின் நண்பரான முருகவேல் மீது பாசம் பொங்கி உள்ளது. இந்த பாசம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், குமார் இல்லாத நேரத்தில் முருகவேல் சத்யாவை பார்க்க அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், அவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படி, கணவனை வெறுத்து வாழ்ந்து வந்த சத்யா, திடீரென்று கர்ப்பமானார். இதனையடுத்து, பிரசவத்துக்கு அம்மா வீட்டிற்கு சத்யா சென்றுள்ளார். அதன்படி, அவருக்கு குழந்தையும் பிறந்தது. இதன் தொடர்ச்சியாக மனைவியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல குமார், மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், சத்யா கணவனுடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறி, அவரை அனுப்பி உள்ளார். 

இதன் காரணமாக, ஒரு வித குழப்பமான  மன நிலையுடன் கணவர் குமார் வீடு திரும்பி உள்ளார். இது சத்யாவுக்கு நல்லா வாய்ப்பாக அமைந்து விட்டது. 

இதனையடுத்து, கள்ளக் காதலன் முருகவேல், அடிக்கடி சத்யா வீட்டிற்கு வந்து, அவருடன் கொஞ்சி பேசி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 

அத்துடன், சத்யா வீட்டிற்கு வரும் முருகவேல் நாள் முழுக்க சத்யா உடன் நேரத்தைச் செலவழித்து, அங்கேயே நாள் முழுக்க இருப்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் பூசாரி தனசேகரனிடம் கூறி உள்ளனர். மகளின் தப்ப பழக்கம் குறித்து அதிர்ச்சியை அடைந்த தந்தை தனசேகரன், இது குறித்து மகளை கண்டித்துள்ளார். ஆனாலும், மகள் சத்யா தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார். அந்த கள்ளக் காதல் சந்தித்து மேலும் தொடர்ந்துள்ளது.

இதனால், ஊர் மக்கள் முன்பு அவமானப்பட்ட தனசேகரன், ஆத்திரமடைந்து மகளை கண்டித்து அவரை அடிக்கவும் செய்துள்ளார். ஆனால், சத்யாவின் அம்மா ராஜேஸ்வரி மகளை கண்டிக்காமல், மகளுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், கணவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

இப்படி, அவர்கள் குடும்பத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூம் எடுத்துள்ளது. இதனால், அம்மாவும், அவரது மகள் சத்யாவும் சேர்ந்து தனசேகரனை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன் படி, அன்று குடும்ப பிரச்சனையின் காரணமாக மது போதையில் வீட்டிற்கு வந்த தனசேகரன், போதையில் படுத்துத் தூங்கி உள்ளார்.

அப்போது, தந்தை தனசேகரனை அவரது மகள் சத்யாவும், அவரது மனைவியும் சேர்ந்து சமையலறைக்கு தரதரவென்று இழுத்து வந்து அரிவாள்மனை மற்றும் கத்தியால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இதில், துடிதுடித்த அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்து விட்டார்.

இது தொடர்பாக, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “தனசேகரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி, மகளிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார் என்றும், இதன் காரணமாக  ஆத்திரமடைந்த அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சத்யா ஆகியோர், முருகவேல் என்பவருடன் சேர்ந்து தனசேகரனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கள்ளக் காதல் கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.