சென்னையில் காதல் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமியை, காதலன் பலவந்தமாக பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதான தேவ அருள் என்னும் இளைஞர், படிப்பைப் பாதியில் முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துகொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் சும்மா இருந்து வந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த இர்பான் என்பவரின் 17 வயது மகளை காதலித்து வந்துள்ளார். தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லியும் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்று தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக மனக்க மனக்க காதல் வார்த்தைகளையும், ஆசை வார்த்தைகளையும் அள்ளித் வீசியிருக்கிறார் தேவ அருள். இதில், அந்த 17 வயது சிறுமி மயங்கி உள்ளார். இதனையடுத்து, அவரை நம்பிய அந்த சிறுமி, அவனின் காதல் வலையில் விழுந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஜூலை 25 ஆம் தேதி அன்று அந்த 17 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நண்பர்கள் உறவினர்கள் வீடு என எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், 2 நாட்கள் கழித்து, அதாவது 28 ஆம் தேதி அன்று புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த சிறுமியின் காதல் விவகாரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி, சிறுமியின் காதலன் தேவ அருள் குறித்தும், போலீசார் தெரிந்துகொண்டனர். 

இதனையடுத்து, சிறுமியின் காதலன் தேவ அருள் குறித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். அதன்படி, அந்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு, தேவ அருளின் நண்பர்களிடமும் போலீசா் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி,  தேவ அருள் தலைமறைவாகி இருந்த இடத்தை கண்டறிந்த போலீசார், அந்த இடத்திற்கு விரைந்து சென்று முதலில் சிறுமியை மீட்டனர். அதனை அடுத்து, சிறுமியின் காதலன் தேவ அருளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “சிறுமியை காதலித்து வந்த தேவ அருள், பெற்றோர்கள் நம் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி, சிறுமியின் மனதை மாற்றியது” தெரிய வந்தது.

“இதன் காரணமாக, நாம் எங்காவது வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்” என்று, அவன் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த 17 வயது சிறுமியை அழைத்துச் சென்று” உள்ளார்.

மேலும், “சிறுமி ஒரு வித தயக்கத்துடன் தான் சென்றார் என்றும், சிறுமியை அழைத்துச் சென்று அந்த இளைஞன் பலவந்தமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி குற்றம்சாட்டியதாக” போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகச் சிறுமியைக் கடத்திய சென்ற தேவ அருளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக, மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு சிறுமியை அவரின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.