பாதுகாப்புப் படையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்திய பாதுகாப்புப் படையில் பாலியல் சர்ச்சை எழுவதும், பின்பும் அது காணாமல் போவது அவ்வப்போது நிகழும் ஒரு சம்பவமாகத்தான் தொடர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ராணுவத்தில் பாலியல் சர்ச்சைகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பாலியல் புகார் எழுந்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.  

Karunajit Kaur sexual harassment

இந்தோ - திபெத்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையில் துணை கமாண்டன்ட் (துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல்) பதவியிலிருந்து கடந்த 17ஆம் தேதி கருணாஜித் கவுர், அதிரடியாக ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய பாதுகாப்புப் படையில் பணியில் சேர்ந்ததாகக் குறிப்பிட்டார். ஆனோல், கடந்த 17ஆம் தேதி அந்த பணியை ராஜினாமா செய்த பிறகே, தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Karunajit Kaur sexual harassment

பாதுகாப்புப் படையிலிருந்தபோது ஒரு சமயம், சண்டிகரில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அப்போது ஒரு மாதத்திற்கு மட்டும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கவுச்சர் 8 வது பட்டாலியனுக்கு, தான் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அங்கு, இரவில் தன்னுடைய அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அங்கே பணியாற்றிய பட்டாலியன் அலுவலர் தீபக், தன்னுடைய அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவரிடமிருந்து போராடித் தான் மீண்டதாகவும் கருணாஜித் கவுர், பாலியல் குற்றச்சாட்டை தற்போது சுமத்தி உள்ளார்.  

இதனிடையே, முன்னாள் பெண் ராணுவ வீரரின் பாலியல் குற்றச்சாட்டு, நாடும் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.