கள்ளக் காதலால் மனைவியைக் கணவர் கொன்ற நிலையில், அவர்களுடைய 2 குழந்தைகளும் நடுத் தெருவுக்கு வந்துள்ளனர்.

இதுபோன்ற அவல நிலைகளுக்கு, இந்த சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.

Former husband murders wife for adultery

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவிடுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும், ஆலங்குடியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். 

இதனிடையே, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்துப் பெற்ற நிலையில், சரண்யா அவரது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பின்னர், சரண்யாவுக்கு மாதம் மாதம் ராஜா, ஜீவனாம்ச பணம் கொடுத்து வந்தார். அப்போது, சரண்யா பல ஆண்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், ஜீவனாம்சம் கொடுக்க மனம் இல்லாமலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜீலை 16 ஆம் தேதி, மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

Former husband murders wife for adultery

இதனையடுத்து, மகளைக் காணவில்லை என்று, அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக சரண்யாவைத் தேடி வந்தனர். அத்துடன், விவகாரத்துப் பெற்ற கணவனும், மனைவியைத் தேடுவது போல் பாவனைக் காட்டி வந்தார்.

ஆனால், கணவர் மீது சந்தேகமடைந்த சரண்யாவின் தந்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இதனால், கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் வந்தது.

இதனைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராஜா மீது சந்தேகப்பட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மனைவியைக் கொலை செய்ததை ஒற்றுக்கொண்டார். 

இதனால், ராஜாவை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக, தாயும் இல்லாமல் - தந்தையும் இல்லாமல் அவர்களது 2 குழந்தைகளும் அநாதையாக நடுத் தெருவில் நிற்கும் அவலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற அவல நிலைகளுக்கு இந்த சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.