இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கி உள்ளது.

jallikattuதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் போட்டி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி இணையதள முன்பதிவு ஆனது கடந்த 11-ம் தேதி முதல் தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது இதில் 4534 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆகும்.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். தச்சங்குறிச்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்து தங்களது பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கி வழங்கப்பட்டது. இதே போல காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது.

மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.