விழுப்புரம் அருகே போலீசார் ஒருவர் விவசாயியை அடித்து அவருக்கு ரத்த வந்ததால், ஆத்திரமடைந்த விவசாயின் மனைவி போலீசை கண்ணத்தில் அரைத்ததால், மிகப் பெரிய அளவில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து ராமன் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரம் முத்து ராமனுக்கும், அந்த பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சந்திரபோஸ்க்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இதனிடையே, முத்துரான் - சந்திரபோஸ்க்கு இடையே, கொடுக்கல் வாங்கலில் திடீரென பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து சந்திரபோஸ் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பாகக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலு, மற்றொரு காவலரை அழைத்துக்கொண்டு, ஆனத்தூர் கிராமத்தில் உள்ள விவசாயி முத்துராமன் வீட்டிற்கு விசாரிக்க சென்றுள்ளார்.

அந்த நேரம் பார்த்து, முத்துராமன் போதையில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த போலீசார், போதையில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முத்துராமனை எழுப்பி உள்ளனர். நல்ல போதையில் இருந்த முத்துராமன், எழுந்ததும் போலீசாரிடம் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு முத்துராமனும் பதில் சொல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையலில், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் தங்கவேலு, விவசாயி முத்துராமனை முகத்தில் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், முத்துராமனின் முக்கு உடைந்து ரத்தம் அதிகமாக வெளியாகி உள்ளது.

இதனால், அந்த கிராமமே அந்த வீட்டின் முன்பு கூடி உள்ளது. நிலைமை ரொம்ப சீரியராகப் போனதை உணர்ந்த போலீசார், அங்கிருந்த கிளம்ப முடிவு செய்தனர்.

அத்துடன், இந்த சம்பங்களைப் படம் பிடிக்க முயன்ற மற்றொருவரின் செல்பொனையும், முத்துராமன் பறித்துக்கொண்டு விட்டார். பின்னர், போலீசாரின் செல்போனை மீண்டும் தரக்கோரி, அந்த போலீஸ்காரர் முத்து ராமனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

மேலும், அங்கு சூழல் கை மீறி போகவே, அங்கிருந்து கிளம்ப நினைத்து, தனது இருசக்கர வாகனத்தை அந்த உதவி ஆய்வாளர் எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, மூக்கில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அங்கு நின்ற முத்துராமன், போலீசாரின் இருசக்கர வாகனத்திலிருந்த சாவியை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுத்துவிட்டார். இதனால், மீண்டும் வண்டியை விட்டு இறங்கிய அந்த போலீசார், முத்துராமனை மீண்டும் தாக்க முற்பட்டுள்ளார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த விவசாயி முத்துராமனின் மனைவி, அந்த உதவி ஆய்வாளரின் கண்ணத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர், மற்ற போலீசாருக்கு போன் செய்து, அந்த கிராமத்திற்கு வர சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக, உதவி ஆய்வளர் போன் செய்து மற்ற போலீசாரை அழைப்பதற்குள். அவருடைய இருசக்கர வாகனத்தை, அந்த கிராமத்து இளைஞர்கள் எடுத்து மறைவாக வைத்துக்கொண்டு. விவசாயியைத் தாக்கியதற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த டி.எஸ்.பி. நல்லசிவம், காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோரையும் கிராம மக்கள் சிறைபிடித்தனர். 

இதனையடுத்து, அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களைச் சமாதானப்படுத்தி போலீசாரை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். அத்துடன், விவசாயி முத்துராமனின் மனைவி, உதவி ஆய்வளரை கண்ணத்தில் அடித்த விவகாரத்தில், அவர் எந்த புகாரும் அளிக்க வில்லை.

மேலும், போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி முத்துராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்தனர். குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில், போலீசார் மீது இருந்த நன்மதிப்பு குறைந்து, அவர்கள் மீது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இப்படிப் பட்ட சூழலில், மீண்டும் போலீசாருக்க எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது போலீசார் மீதான நன்மதிப்பை மேலும் கெடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.