“கள்ளக் காதலி யாருக்கு சொந்தம்?” என்ற தகராறில் இரு நண்பர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் அயோதியாப் பட்டிணத்தைச் சேர்ந்த 23 வயதான கிருபை ராஜ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான 23 வயதான கலைமணி என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். 

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

அத்துடன், கிருபை ராஜ் தனது கள்ளக் காதலி கலைமணியை பார்க்கச் செல்லும் போதெல்லாம், தனது நண்பன் கலையரசனையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். 

இந்த சந்தர்ப்பத்தில் தான் கலையரசனுக்கும், கலைமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் ஆன இளம் பெண்ணை காதலித்து அவருடன் சவகாசம் வைத்துக்கொண்டு வந்ததால், கள்ளக் காதலி கலைமணியை யார் உரிமை கொண்டாடுவது என்பதில், நண்பர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், சேலம் குமரகிரி அருகே உள்ள மலைப் பகுதிக்கு கிருபைராஜும், கலைமணியும் சென்றிருக்கின்றார்கள். அங்கு, அவர்கள் இருவரும் சென்று இருப்பதைத் தெரிந்து கொண்ட கலையரசன், இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார்.

அப்போதும், “கலைவாணியை யார் இனி உரிமை கொண்டாடி திருமணம் செய்து கொள்வது” என்பதில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை எழுந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில், நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டு உள்ளனர்.

அப்போது கடும் ஆத்திரமடைந்த கலையரசன், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருபைராஜை சரமாரியாக குத்தி உள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த காதலி கலைமணி, பக்கத்தில் இருக்கும் பொது மக்களிடம் ஓடிச் சென்று விவரத்தை கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக விரைந்து வ்நத கிச்சிப்பாளையம் போலீசார், உயிரிழந்த கிருபைராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நண்பனை கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய கலையரசனை, தீவிர தேடலில் வேட்டைக்கு பிறகு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலியை யார் திருமணம் செய்து கொள்வது என்ற போட்டா போட்டியில், மற்றொரு நண்பனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.