புதுவையில் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மகன் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் கீழ் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த 53 வயதான கன்னியப்பன் என்பவர், அங்குள்ள கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை ஒன்றை நடத்தி வந்தார். இந்த பண்ணையைக் கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பணியிலும் கன்னியப்பன் ஈடுபட்டு வந்தார். இதற்காக வெளியூர்களில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து இது போன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுமிகளும் சிலர் இருந்தனர். இவர்களை கோர்க்காடு பகுதியில் மட்டுமல்லாது, அங்குள்ள வானூர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் இந்த பகுதியில் வாத்து மேய்ப்பதற்காக கன்னியப்பன் அனுப்பி வைத்து உள்ளார். தமிழகப் பகுதிகளில் தொடர்ந்து சிறுமிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், இது தொடர்பாக அந்த மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு ரகசியத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுமிகளை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் அங்குள்ள காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், “அவர்களைப் போல் மேலும் சில சிறுமிகள், அங்குள்ள வில்லியனூர் அருகே உள்ள கோர்க் காட்டில் வீட்டில் அடைத்து வைத்து, பண்ணை தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்களை” அவர்கள் தெரிவித்து உள்ளனர். 

இதையடுத்து, குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் வில்லியனூரை அடுத்த கோர்க்காடுக்கு சென்று சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து மிகவும் ரகசியமாக விசாரித்தனர். இதில், அந்த சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசாரின் உதவியுடன் அங்கு விரைந்த சென்ற குழந்தைகள் நலக்குழுவினர், சிறுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, அந்த சிறுமிகளை அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். 

தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், “வெறும் 3 ஆயிரம் ரூபாயை சிறுமிகளின் பெற்றோரிடம் கொடுத்து சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க வைத்து இருந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து அவர்கள் தொடர்ந்து பாலியல் 

பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமைப் படுத்தி வந்ததாகவும்” பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

குறிப்பாக, “பண்ணையில் இருக்கும் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விடுவதோடு, யாரும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்றும், சாப்பாடு மட்டும் கொடுக்கப்படும்” என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், “பண்ணையில் உள்ளன கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது, போதை பொருட்களை சிறுமிகளக்கு கொடுத்து தொடர்ந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து” வந்ததும் தெரிய வந்தது. 

இவை தவிர, “சினிமாவில் வருவது போல் சிறுமிகளை கட்டி வைத்து சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்தது. இப்படி, எதுவுமே தெரியாமலேயே அந்த சிறுமிகள், நீண்ட நாட்களாக இப்படி பல விதமான கொடுமைகளை அனுபவித்து வருவதும் தெரிய வந்தது. இதனால், அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கடுமையாகப் பாதிப்புக்கு அந்த சிறுமிகள் அனைவரும் ஆளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தற்போது கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளில் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. தற்போது, அந்த சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த பரிசோதனையில், 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இது குறித்து, மங்கலம் போலீசில் குழந்தைகள் நலக்குழுவினர் அளிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்ததாக போலீசார், சிறுமிகள் அடையாளம் காட்டியதன் படி, முதல் கட்டமாக சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.