கடந்த 2 ஆண்டுகளாக பெற்ற மகளுக்கே கொடூர தந்தை ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, அந்த கொடூர தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் அதுவும் ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் வந்தாலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதரான குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது வேதனை அளிக்கிறது. 

“தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், குற்றங்கள் குறையும் என்பார்கள்” ஆனால், நம் நாட்டில் அந்த அளவிற்கு கடுமையான தண்டனைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

அதன் காரணமாக தான் பெற்ற மகளுக்கே, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார் தந்தை ஒருவர். 

அதன்படி, திருவண்ணாமலை அருகே நாடழகானந்தல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். 51 வயதாகும் சேகரின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருக்கு 14 வயதில் 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 11 வயதில் 6 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தான், சேகர் கடந்த 2 ஆண்டுகளாக தனது 11 வயது மகளுக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார்.

இது குறித்து வெளியில் சொல்லாமல் இருந்து வந்த சிறுமி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது சித்தி ஜெயலட்சுமியிடம் தந்தையின் இந்த பாலியல் அத்து மீறல்கள் செயல்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி ஜெயலட்சுமி, அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தை சேகரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனை அடுத்து, மகளிர் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், “சேகர் தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது” உறுதி செய்யப்பட்டது. 

அதன் பிறகு, தீவிர விசாரணைக்குப் பிறகு மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அந்த கொடூர தந்தை, நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அங்குள்ள போளூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, திருவண்ணாமலை அருகே பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த 11 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.